நாளை 02.03.2026 திங்கட்கிழமை தங்கம் புதிய விலை உயர்வையும் பங்குச்சந்தை புதிய சரிவையும் சந்திக்கும் என்பதற்கான காரணத்தை விளக்கமாக காண்போம்.
தற்போது இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈரானின் மீது தாக்குதலும் பதிலுக்கு ஈரான் இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படை மீது பதில் தாக்குதலும் நடத்தி வருவதால் சர்வதேச அளவில் போர்ப்பதற்றம் நிலவுகிறது.
இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசுகள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குகளை விற்க தொடங்குவார்கள். இதனால் இந்தியப் பங்குச்சந்தைகள் மிகப்பெரும் சரிவை சந்திக்கும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசுகள் பங்கு விற்பனையில் பெற்ற தொகையையும் கூடுதல் தொகையையும் நிலைத்தன்மை உள்ள தங்கத்தில் பெருமளவு முதலீடு செய்யத் தொடங்குவார்கள். இதனால் சர்வதேச அளவில் தங்கம் மிகப்பெரிய விலை உயர்வை சந்திக்கும்.
இதனால் மிகப்பெரிய முதலீட்டு வர்த்தகமானது பங்குகளிலிருந்து தங்கத்திற்கு மாறும். எனவே தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வரலாற்று உச்சத்தை அடையும்.
ஆனால் ஆறுதலான செய்தி என்னவென்றால் இது முற்றிலும் தற்காலிகமானதே.
போர்பதற்றம் குறைய ஆரம்பித்தவுடன் தங்கத்தை பெருமளவு விற்று பங்குகளில் வர்த்தம் ஆரம்பபிக்கத் தொடங்குவர். அப்போது தங்கம் மீன்டும் சரியத் தொடங்கும் பங்குச்சந்தை மீண்டும் எழத் தொடங்கும்.
ஏனேனில் தங்கம் சீரான வளர்ச்சியை மட்டுமே கொடுக்கும். பங்கு வர்த்தகம் அசுர வளர்ச்சியை கொடுக்கும் என்பதாலே.
இதிலிருந்து நாம் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். தங்கம் மற்றும் பங்குச்சந்தை ஆகியவற்றின் விலை உயர்வுக்கும் விலை சரிவுக்கும் காரப்பரேட் எனும் பெரு முதலாளிகள் தான் காரணம் ஆகும்.
No comments:
Post a Comment