Inaiya Sevaigal: ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

Date

Disable Ctrl+P

ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்



ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் 


சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான படிவங்​களை தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் நிரப்​பும் வசதி கொண்​டு​வரப்​பட்​டுள்​ள​தாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர்​கள் வசதிக்​காக இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் தனது அதி​காரப்​பூர்வ இணை​யதள​மான https://voters.eci.gov.in -ல் எஸ்​ஐஆர் படிவத்தை ஆன்​லைனில் நிரப்​புவதற்​கான வசதியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வாக்​காளர்​கள் தங்​களது பதிவு செய்​யப்​பட்ட செல்​போன் எண் அல்​லது வாக்​காளர் அடை​யாள அட்டை எண்ணை பயன்​படுத்தி இணை​யதளம் மூலம் உள் நுழைய பதிவு செய்​யப்​பட்ட செல்​போன் எண்​ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்​சொல்லை உள்​ளீடு செய்ய வேண்​டும். உள்​நுழைந்த பின் னர் அந்த இணைய பக்​கத்​தில் காட்​டப்​படும் “Fill Enumeration Form” என்ற இணைப்​பினை தேர்வு செய்​ய​லாம்.

இ-சைன் முறை: இந்த வசதியை வாக்​காளர் பட்​டியலில் உள்ள பெயரும், ஆதார் அட்​டை​யில் உள்ள பெயருடன் பொருந்​தும் வாக்​காளர்​கள் மட்​டுமே பயன்​படுத்த இயலும். வெற்​றிகர​மாக உள்​நுழைந்த பிறகு வாக்​காளர், இணை​யப்​பக்​கத்​தில் கோரப்​படும் தேவை​யான விவரங்​களை நிரப்ப வேண்​டும். சரி​யான விவரங்​களைச் சமர்ப்​பித்த பிறகு இணைய பக்​க​மானது இ-சைன் (e-sign) பக்​கத்​துக்கு மாறும். அதன் பின்​னர் பதிவு செய்​யப்​பட்ட செல்​போன் எண்​ணுக்கு ஒரு முறை கடவுச்​சொல் அனுப்​பப்​படும். அந்த ஒரு முறை கடவுச்​சொல்லை உள்​ளிட்​ட​வுடன், படிவம் வெற்​றிகர​மாக பதிவேற்​றப்​படும்.

தங்​களது செல்​போன் எண்​களை பதிவு செய்​திருக்​கும், மேலும் வாக்​காளர் பட்​டியல் மற்​றும் ஆதார் பதிவு​களில் பெயர் பொருந்தி உள்ள வாக்​காளர்​கள் இந்த வசதி​யைப் பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறார்​கள். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.


No comments:

Post a Comment