அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை கேட்டு 4 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பிற்கு தனியாக நிதி ஒதுக்கீடு தேவையில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் ஆனது ஊதியப்பிரிவு கணக்குத் தலைப்பின் கீழ் தான் வருகிறது. எனவே அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டிலேயே ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்திற்கான நிதியும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டும் உள்ளது. தற்போதும் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டும் தான் வருகிறது.
எனவே புதிய நிதி ஒதுக்கீடு தேவையில்லை. ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுத் தான் உள்ளது.
ஆகவே தற்போது தேவை நிதி ஒதுக்கீடு இல்லை. ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கலாம் என்ற அரசாணை தான்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் வழங்கும் நிலைக்கு ஒரு பழிமொழி மிகச்சரியாக பொருந்தும்.
”பணம் தேவையில்லை மனம் தான் தேவை”.
No comments:
Post a Comment