கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்
தற்போது தோன்றும் பக்கத்தில் மேக்கர் ஐடி கொண்டு லாக் இன் செய்யவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் மேக்கர் ஐடி மற்றும் மேக்கர் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து லாக் இன் செய்யவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் பேமென்ட் ஃபைல் என்ற தொகுதியை க்ளிக் செய்து அடுத்து தோன்றும் துணை தொகுதியில் பேமென்ட் இன்சியேட் என்பதை தேர்வு செய்யவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் பேயி டைப்பில் வென்டார் என்றும், டிரான்சாக்சன் நேச்சர் என்ற இடத்தில் எக்சபன்டிச்சர் என்றும், டிரான்சாக்சன் பர்பஸ் என்ற இடத்தில் பேமென்ட் என்றும் டிரான்சாக்சன் டைப் என்ற இடத்தில் நியூ என்றும் தேர்வு செய்யுங்கள்.
அடுத்த உள்ள இடத்தில் தானாகவே தற்போதைய ஆண்டு இருக்கும்.
அடுத்து உள்ள புராஜக்ட் ஐடி என்ற இடத்தில் எஸ்எம்சி லெட்டர் பேட் என டைப் செய்யுங்கள்.
அடுத்து உள்ள நரேசன் என்ற இடத்திலும் எஸ்எம்சி லெட்டர் பேட் என டைப் செய்யுங்கள்.
சான்க்சன் நம்பர் என்ற இடத்தில் இது தான் நமது முதல் பேமென்ட் என்பதால் 1 என கொடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு பிடித்த எண்ணை கொடுத்துக்கொள்ளுங்கள்.
சான்க்சன் டேட் என்ற இடத்தில் இன்றைய தேதியை கொடுத்துக்கொள்ளுங்கள்.
சான்க்சன் காப்பி இடத்தை விட்டு விடுங்கள்.
அடுத்து உள்ள ரிமார்க்ஸ் என்ற இடத்திலும் எஸ்எம்சி லெட்டர் பேட் என டைப் செய்யுங்கள்.
தற்போது சேவ் ஃபைல் என்ற பட்டனை அழுத்துங்கள்.
தற்போது புரசீட் டூ செலக்டிங் வென்டர் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது ஆர்டர் நம்பர் தோன்றும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் ஆர்டர் நம்பரை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக ஃபெட்ச் பட்டனை அழுத்தவும்.
தற்போது ஃபைன்ட் வென்டார் பட்டனை அழுத்தவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட பில்லில் உள்ள அக்கவுன்ட் நம்பரை டைப் செய்து ஸ்செர்ச் பட்டனை அழுத்தவும்.
தற்போது தங்கள் பில்லில் உள்ள பெயரின் வென்டார் திரையில் தோன்றும்.
அதை செலக்ட் செய்யவும்.
தற்போது ஃபெட்ச் பட்டனை அழுத்தவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் கம்ப் கோட் என்ற பட்டனை அழுத்தவும்.
தற்போது அதிக கோட் களை கொண்ட பக்கம் தோன்றும். அதில் ஃபைன்ட் காம்போனட் என்ற இடத்தில் F.01.10 என்று டைப் செய்தவுடன் எஸ்எம்சி விவரம் தோன்றும் அதை செலக்ட் செய்யவும்.
தற்போது தங்களின் பில் தொகையை உள்ளிடவும்.
தற்போது ஆட் காம்போனன்ட் பட்டனை அழுத்தவும்.
தற்போது ஆட் வென்டார் பட்டனை அழுத்தவும்.
தற்போது நெட்பேன்கிங் ஐ தேர்வு செய்து இன்சியேட் பேமென்ட் பட்டனை அழுத்தவும்.
தற்போது மேக்கரின் டிரான்சக்சன் பாஸ்வேர்ட் ஐ கேட்கும். அதை உள்ளிட்டவுடன் பேமென்ட் கிரியேட் ஆகிவிடும்.
தற்போது லாக் அவுட் செய்து விட்டு கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து செக்கரில் லாக் இன் செய்யவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் செக்கர் பாஸ்வேர்ட் ஐ உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் அப்ரூவ் தொகுதியை க்ளிக் செய்து அதன் உடன் தோன்றும் அப்ரூவ் பேமென்ட் துணை தொகுதியை க்ளிக் செய்யுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் ஆர்டர் நம்பரை உள்ளிட்டு பெட்ச் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது அப்ரூவ் வித் டிராசன்சக்சன் பாஸ்வேர்ட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது டிரான்சக்சன் பாஸ்வேர்ட் ஐ உள்ளிட்டவுடன் பணம் அனுப்பப்பட்டு விடும்.
தற்போது பில் தோன்றும். இல்லையெனில் ரிப்போர்ட் தொகுதியில் பேமென்ட் வவுச்சர் துணை தொகிதியை தேர்வு செய்து பில் ஐ எடுத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment