Inaiya Sevaigal: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.4420 கோடியை எடுத்து கொண்ட தமிழக அரசு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.4420 கோடியை எடுத்து கொண்ட தமிழக அரசு


100 சதவீதம் உண்மைங்க.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.4420 கோடியை எடுத்து கொண்ட தமிழக அரசு

1.1.2022 முதல் 31 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது தமிழக அரசு இதனால் அரசுக்கு ஆண்டு தொடர் செலவினமாக ரூ.6480 கோடி ரூபாய் செலவாகும் என தனது அரசாணையில் தெரிவித்திருந்தது.

இந்த 31 சதவீத அகவிலைப்படி 1.7.2021 முதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 6 மாதம் கழித்து 1.1.2022 முதல் தான் தமிழக அரசு வழங்கியது. இதனால் ஆண்டு செலவினத்தில் ரூ.6480 கோடியில் 6 மாதத்திற்கான தொகை ரூ. 3240 கோடி ஆகும்.

அடுத்ததாக தற்போது 1.1.2023 முதல் 38 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது தமிழக அரசு இதனால் அரசுக்கு ஆண்டு தொடர் செலவினமாக ரூ.2359 கோடி ரூபாய் செலவாகும் என தனது அரசாணையில் தெரிவித்திருந்தது.

இந்த 38 சதவீத அகவிலைப்படி 1.7.2022 முதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 6 மாதம் கழித்து 1.1.2023 முதல் தான் தமிழக அரசு வழங்கியது. இதனால் ஆண்டு செலவினத்தில் ரூ.2359 கோடியில் 6 மாதத்திற்கான தொகை ரூ. 1180 கோடி ஆகும்.

ஆக இந்த இரண்டு அகவிலைப்படி உயர்வில் மட்டும் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வியர்வை உழைப்புக்கு வழங்க வேண்டிய ஊதியத்தில் ரூ. 3240 கோடி + ரூ. 1180 கோடி = ரூ.4420 கோடியை ஏப்பம் விட்டு விட்டது தமிழக அரசு. 

No comments:

Post a Comment