EB எண்ணுடன் ஆதார் எண் இணைப்பை மிக எளிமையாக்கிய புதிய நடைமுறையை பிறப்பித்தது தமிழக அரசு.
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களது இபி எண் மற்றும் தங்களின் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு திரையில் கேப்சாவை உள்ளிட்டு என்டர் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் திரையில் சர்வீஸ் இணைப்பு உள்ளவரின் பெயர் காண்பிக்கப்படும். தற்போது அந்த இணைப்பிற்கு தாங்கள் தான் ஓனரா? அல்லது தாங்கள் தான் ஓனர் ஆனால் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லையா? அல்லது தாங்கள் வாடகை தாரதா? அல்லது தாங்கள் என்ஆர்ஐ ஆ? என டிக் செய்து தங்களின் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள்.
தற்போது தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
உடனே சர்வீஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment