அனைத்து பள்ளிகளும் பயன்படுத்த இருக்கும் கனரா வங்கியின் SNA மேக்கர், செக்கர் என்றால் என்ன? பார்ப்போம்.
மேக்கர் என்பவர் பள்ளியின் எஸ்எம்சி தலைவர் ஆவார். அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளையும் உருவாக்குபவர் இவர் தான் ஆகவே இவரை மேக்கர் என அழைப்பர்.
செக்கர் என்பவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆவார். பள்ளியின் எஸ்எம்சி தலைவர் உருவாக்கும் அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளையும் செக் செய்து செய்துஅப்ரூவல் அளிப்பவர் இவர்தான். ஆகவே இவரை செக்கர் என அழைப்பர்.
ஒவ்வொரு பள்ளிக்கும் மேக்கர் ஐடி யும் செக்கர் ஐடியும் வழங்கப்பட்டிருக்கும். மேக்கர் ஐடி என்னும் ஒன்பது இலக்க எண்ணும் செக்கர் ஐடி என்னும் ஒன்பது இலக்க எண்ணும் ஒன்றாகவே இருக்கும். மேக்கர் எனில் முன்னால் M என்றும் செக்கர் எனில் முன்னால் C என்றும் இருக்கும். மற்றபடி ஒன்பது இலக்க ஐடி எண் ஒன்றாகவே இருக்கும்.
உதாரணமாக ஒரு பள்ளிக்கு மேக்கர் ஐடி M123456789 எனில் அப்பள்ளியின் செக்கர் ஐடி C123456789 ஆகும்.
அடுத்ததாக மேக்கர் மற்றும் செக்கருக்கு வழங்கப்படும் பாஸ்வேர்ட் பற்றி அறிந்துகொள்வோம்.
மேக்கருக்கு இரண்டு பாஸ்வேர்டுகளும் செக்கருக்கு இரண்டு பாஸ்வேர்டுகளும் வழங்கப்பட்டிருக்கும்.
இரண்டு பாஸ்வேர்ட் என்ன என்றால் முதல் பாஸ்வேர்ட் லாக் இன் பாஸ்வேர்ட் ஆகும். அதாவது மேக்கர் மற்றும் செக்கர் இருவரும் கனரா வங்கியின் இணையதளத்தில் உள்நுழைவதற்கு மட்டுமே இந்த பாஸ்வேர்ட் பயன்படும்.
உள்நுழைவு பாஸ்வேர்ட் அதாவது லாக் இன் பாஸ்வேர்ட் ஐ பயன்படுத்தி ஒரு விற்பனையாளரை உருவாக்கவும் அப்ரூவல் செய்யவும் மட்டுமே முடியும். அதாவது மேக்கர் பாஸ்வேர்ட் ஐ பயன்படுத்தி உள்நுழைந்து ஒரு விற்பானையாளரை உருவாக்கவும், செக்கர் பாஸ்வேர்ட் ஐ பயன்படுத்தி உள்நுழைந்து மேக்கர் உருவாக்கிய விற்பனையாளரை அப்ரூவ் செய்யவும் மட்டுமே முடியும்.
இரண்டாவது பாஸ்வேர்ட் டிரான்ஸாக்சன் பாஸ்வேர்ட். அதாவது பணப்பரிமாற்ற பாஸ்வேர்ட். மேக்கர் இந்த டிரான்ஸாக்சன் பாஸ்வேர்ட் ஐ பயன்படுத்தி உள்நுழைந்து ஒரு விற்பனையாளருக்கு பணத்தை அனுப்ப பட்டியல் தயார் செய்ய வேண்டும். தற்போது செக்கர் இந்த டிரான்ஸாக்சன் பாஸ்வேர்ட் ஐ பயன்படுத்தி உள்நுழைந்து மேக்கர் பணம் அனுப்ப தயாரித்த பட்டியலலை சரிபார்த்து அப்ரூவ் செய்ய வேண்டும்.
இவ்வாறு மேக்கர் தயாரித்த பணப் பட்டியலை செக்கர் அப்ரூவ் செய்தால் தான் விற்பனையாளரின் வங்கி கணக்கிற்கு பணம் போய்ச் சேரும்.
No comments:
Post a Comment