Inaiya Sevaigal: ஆன்லைனில் கல்விக் கடன் (Educational Loan) பெறுவது எப்படி?

ஆன்லைனில் கல்விக் கடன் (Educational Loan) பெறுவது எப்படி?


கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் முதல் பெயர், கடைசி பெயர், மொபைல் எண், இமெயில் முகவரி, உங்களுக்கான பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு ஐ அக்ரி பட்டனை டிக் செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

ஐ அக்ரி பட்டனை அழுத்தும் போது டிக் செய்ய முடியாது. ஒரு முறை அதற்கு பக்கத்தில் உள்ள டெர்ம்ஸ் அன்ட் கன்டிசன்ஸ் லின்க் ஐ க்ளிக் செய்த பிறகு ஐ அக்ரி பட்டனை அழுத்த முடியும்.

தற்போது உங்கள் கணக்கு உருவாகிவிடும். ஆக்டிவேசன் லின்க் தங்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதை க்ளிக் செய்து தங்களின் கணக்கை ஆக்டிவேசன் செய்யலாம்.

தற்போது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

தற்போது உங்களின் இமெயில் ஐடி மற்றும் தாங்கள் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து கேப்சாவை கொடுத்து Login பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் தங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை 200கேபி க்குள் வலது புறம் உள்ள அப்லோட் என்ற இடத்தில் அப்லோட் செய்யுங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் லோன் அப்ளிகேசன் ஃபார்ம் என்ற பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் இன்ஸ்ட்ரக்சன்ஸ் என்பதை நன்றாக படித்துக் கொள்ளுங்கள்.

தற்போது நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் . உயர்கல்வியை இந்தியாவில் படிக்க விரும்புகிறீர்களா? பெற்றோரின் வருமானம் 4,50,000 க்குள் உள்ளதா? கல்வி டெக்னிக்கல் கோர்ஸா? நாக் அங்கீகாரம் பெற்றதா? போன்ற  தங்களின் கல்வி தொடர்பான அடிப்படை விவரங்களை நிரப்புங்கள்

தற்போது நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தங்களின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, சாதி, திருமண நிலை, கல்வி தகுதி, பெற்ற மதிப்பெண்கள், தொழில், பான் எண், மாநிலம், முகவரி, போன்றவற்றை நிரப்பி நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஐஎஃப்எஸ்சி எண், சேமிப்புக் கணக்கு விபரம், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை நிரப்பி நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் தாங்கள் மெரிட் அல்லது மேனேஜ்மென்ட் பிரிவில் சேர்ந்துள்ளீர்களா? என தெரிவியுங்கள். அடுத்து தாங்கள் படிக்கும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுங்கள். கல்வி ஆண்டு, சேர்ந்த தேதி, முடிக்கும் தேதி, ஆகியவற்றை நிரப்பி நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு என்னென்ன கட்டணங்கள் பொருந்துமோ? அந்தந்த கட்டணங்களுக்கு எதிரே தங்களுக்குரிய கட்டணங்களை நிரப்புங்கள். தங்களுக்கு எவ்வளவு லோன் தேவை? எத்தணை தவணைகளில் பெற விரும்புகிறீர்கள் என்பதை நிரப்பி நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் 2 எம்பி க்குள் ஆவணங்களை அப்லோட் செய்யுங்கள். மதிப்பெண் சான்றிதழ்கள், அட்மிசன் ரசீது, கல்வி கட்டணத்தின் அட்டவணை போன்றவற்றை அப்லோட் செய்து சேவ் பட்டனை அழுத்துங்கள்.

No comments:

Post a Comment