Inaiya Sevaigal: 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் (அனைத்து வகையான பள்ளிகளும்) மாணவர்களில் மத்திய அரசின் சிறுபாண்மை உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் (அனைத்து வகையான பள்ளிகளும்) மாணவர்களில் மத்திய அரசின் சிறுபாண்மை உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல்


1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் கீழ்க்கண்ட அனைவரும் மத்திய அரசின் சிறுபாண்மை உதவித்தொகையை  பெறத் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி எந்தப் பள்ளியில் பயிலும் கீழ்க்கண்ட தகுதியுடைய மாணவர்களும் விண்ணப்பித்து உதவித் தொகையை பெற முடியும்.

1. ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தில் காப்பீடு செய்துள்ளவரின் குழந்தைகள்.

2. பீடித் தொழிலாளர்களின் குழந்தைகள்.

3. மத்திய பாதுகாப்பு படை காவலரின் குழந்தைகள்.

4. சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள்.

5. ஓய்வுபெற்ற ரயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தைகள்.

6. ஓய்வுபெற்ற ரயில்வே பாதுகாப்பு தடுப்பு படையினர் குழந்தைகள்.

7. விமான ஓட்டிகள் குழந்தைகள்.

8. இரும்பு தாது, மாங்கனீசு தாது, குரோம் தாது சுரங்கப் பணியாளர்கள் குழந்தைகள்.

9. சுண்ணாம்பு, டோலமைட் சுரங்கப் பணியாளர்கள் குழந்தைகள்.

10. மைக்கா சுரங்கப் பணியாளர்கள் குழந்தைகள்.

11. இதரர் (முஸ்லிம், கிறிஸ்துவம் போன்ற சிறுபாண்மையினர்)

12. துப்புரவுப் பணியாளர்கள்

13. ரயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தைகள்.

14. ரயில்வே பாதுகாப்பு தடுப்பு படையினர் குழந்தைகள்.

15. நக்சலைட் மற்றும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மாநில காவல் துறையினரின் குழந்தைகள்

16. தோல் பதனிடும் தொழிலாளர்களின் குழந்தைகள்.

17. கழிவு அகற்றும் பணியாளர்களின் குழந்தைகள்.

No comments:

Post a Comment