வாக்கு எண்ணிக்கை தினம் (02.05.2021) எந்த தலைவருக்கு அதிர்ஷ்ட தினமாக அமையும்? என்பதைப் பார்ப்போம். இது ஒரு நியூமராலஜி ஆய்வறிக்கை.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து முனைப்போட்டி இருந்தது.
இந்த ஐந்து தலைவர்களின் பிறந்த தேதி நியூமராலஜி அடிப்படையிலும், வாக்கு எண்ணிக்கை தேதி நியூமராலஜி அடிப்படையிலும் எந்த தலைவருக்கு அதிர்ஷ்ட தினமாக அமையும் என்று ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வறிக்கை தங்களின் பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது.
முதலில் வாக்கு எண்ணிக்கை தினத்தின் நியூமராலஜி எண்ணை அறிந்துகொள்வோம். வாக்கு எண்ணிக்கை தினம் 02.05.2021 ஆகும். இந்த தேதியின் நியூமராலஜி எண் 3 ஆகும்.
தற்போது ஒவ்வொரு தலைவர்களுக்கும் உள்ள நியூமராலஜி எண்ணை அறிந்து கொள்வோம்.
1. முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த தேதி 12.05.1954 ஆகும். இவரின் நியூமராலஜி எண் 9 ஆகும். 9 நியூமராலஜி எண்ணை கொண்டவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 1, 2, 9 ஆகும். பகை எண்கள் 5, 6 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை தினத்தின் நியூமராலஜி எண் 3 என்பதாலும் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் நியூமராலஜி அதிர்ஷ்ட எண்களில் 3 இல்லாததாலும் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தினம் அதிர்ஷ்ட தினமாக அமைய வாய்ப்புக் குறைவு ஆகும்.
2. திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த தேதி 01.03.1953 ஆகும். இவரின் நியூமராலஜி எண் 4 ஆகும். 4 நியூமராலஜி எண்ணை கொண்டவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 2, 3, 9 ஆகும். பகை எண்கள் 4, 6, 8 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை தினத்தின் நியூமராலஜி எண் 3 என்பதாலும் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் நியூமராலஜி அதிர்ஷ்ட எண்களில் 3 இருப்பதாலும் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தினம் அதிர்ஷ்ட தினமாக அமைய வாய்ப்பு உள்ளது.
3. திரு. டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த தேதி 13.12.1963 ஆகும். இவரின் நியூமராலஜி எண் 8 ஆகும். 8 நியூமராலஜி எண்ணை கொண்டவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 5, 6, 8 ஆகும். பகை எண்கள் 1, 2, 9 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை தினத்தின் நியூமராலஜி எண் 3 என்பதாலும் திரு. டிடிவி தினகரன் அவர்களின் நியூமராலஜி அதிர்ஷ்ட எண்களில் 3 இல்லாததாலும் திரு. டிடிவி தினகரன் அவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தினம் அதிர்ஷ்ட தினமாக அமைய வாய்ப்புக் குறைவு ஆகும்.
4. திரு. சீமான் அவர்களின் பிறந்த தேதி 08.11.1966 ஆகும். இவரின் நியூமராலஜி எண் 5 ஆகும். 5 நியூமராலஜி எண்ணை கொண்டவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 4, 5, 6 ஆகும். பகை எண்கள் 1, 2, 9 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை தினத்தின் நியூமராலஜி எண் 3 என்பதாலும் திரு. சீமான் அவர்களின் நியூமராலஜி அதிர்ஷ்ட எண்களில் 3 இல்லாததாலும் திரு. சீமான் அவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தினம் அதிர்ஷ்ட தினமாக அமைய வாய்ப்புக் குறைவு ஆகும்.
5. திரு. கமல்ஹாசன் அவர்களின் பிறந்த தேதி 07.11.1954 ஆகும். இவரின் நியூமராலஜி எண் 1 ஆகும். 1 நியூமராலஜி எண்ணை கொண்டவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 8, 6, 5 ஆகும். பகை எண்கள் 1, 2, 9 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை தினத்தின் நியூமராலஜி எண் 3 என்பதாலும் திரு. கமல்ஹாசன் அவர்களின் நியூமராலஜி அதிர்ஷ்ட எண்களில் 3 இல்லாததாலும் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தினம் அதிர்ஷ்ட தினமாக அமைய வாய்ப்புக் குறைவு ஆகும்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் நியூமராலஜி விதிகளின் படி மட்டுமே கணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment