Inaiya Sevaigal: தபால் வாக்கினை தவறில்லாமல் வாக்களிப்பது எப்படி?

தபால் வாக்கினை தவறில்லாமல் வாக்களிப்பது எப்படி?


தபால் வாக்கினை தவறில்லாமல் வாக்களிப்பது எவ்வாறு என்று பார்ப்போம்.

1. உங்களிடம் வழங்கப்படும் தபால் வாக்கு கவரில் கீழ்க்கண்டவைகள் இருக்கும்.

Form 13A   (Form 13A என்பது வாக்காளர் உறுதிமொழி படிவம்)

Form 13B   (Form 13B என்பது COVER - A படிவம் - இதன் உள்ளே வாக்குச்சீட்டு இருக்கும்)

Form 13C   (Form 13C என்பது COVER - B படிவம் )

Form 13D   (Form 13D என்பது வழிமுறைகளைத் தெரிவிக்கும் படிவம்)


தபால் வாக்களிப்பது எவ்வாறு என்று பார்ப்போம்.

Form 13A என்ற வாக்காளர் உறுதிமொழி படிவத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டில் (Form 13B என்ற COVER - A படிவத்தின் உள்ளே வாக்குச்சீட்டு இருக்கும்) குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணை எழுதி கையொப்பம் இட்டு அரசிதழ் பதிவு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.

பின்னர் Form 13B என்ற COVER - A படிவத்தின் உள்ளே வாக்குச்சீட்டு இருக்கும். அந்த வாக்குச் சீட்டில் நமக்கு விரும்பிய நபரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்தில் பால் பாய்ன்ட் பேனாவால் டிக் செய்யவும். கண்டிப்பாக நாம் செய்யும் டிக் ஆனது டிக் செய்யும் நபரின் மேலும் கீழும் உள்ள கோட்டைத் தாண்டி விடக்கூடாது. அதாவது நாம் டிக் செய்யும் விரும்பும் நபரின் மேல் மற்றும் கீழ் கோட்டிற்குள் டிக் செய்ய வேண்டும். 

டிக் ஆனது ஒரு சிறிய அளவு கூட மேல் அல்லது கீழ் கோட்டைத் தாண்டி விட்டால் அது மற்ற வேட்பாளர் பெயரிலும் டிக் செய்தது போல் ஆகிவிடும். இதனால் செல்லாத வாக்காகிவிடும்.

பால் பாய்ன்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்துங்கள். இன்ங்க் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இன்ங்க் பேனாவை பயன்படுத்தினால் இன்ங்க் ஊறி மற்ற வேட்பாளர்களின் பெயரில் பட்டுவிடலாம். 

பல வேட்பாளர்களின் பெயரில் இன்ங்க் இருந்தால் செல்லாத வாக்காகிவிடும்.

இப்போது வாக்குச்சீட்டை ஏற்கனவே எப்படி மடித்து இருந்ததோ? அதே போல் மடித்து Form 13B என்ற COVER - A வில் வைத்து ஒட்டிவிடுங்கள். தற்போது Form 13B என்ற COVER - A யும், நாம் கையொப்பம் இட்டும், அதிகாரியிடம் சான்றொப்பம் வாங்கியும் வைத்திருந்த Form 13A என்ற வாக்காளர் உறுதிமொழி படிவத்தையும்  Form 13C என்ற COVER - B யில் வைத்து ஒட்டிவிடுங்கள். தற்போது Form 13C என்ற COVER - B யின் மேற்புறத்தில் கையொப்பம் இடுங்கள்.

தற்போது ஒட்டுப்பட்டு தங்கள் கையில் இருக்கும் Form 13C என்ற COVER - B யை உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் தபால் பெட்டியிலோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் வாக்கு சேகரிப்பு பெட்டியிலோ போட்டு விடுங்கள்.

Form 13D என்பது வழிமுறைகளைத் தெரிவிக்கும் படிவம். ஆகவே அதை வீட்டிலே வைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment