Inaiya Sevaigal: Remove name from ration card | how to remove name from ration card tamil nadu | how to remove name in ration card in tamil

Remove name from ration card | how to remove name from ration card tamil nadu | how to remove name in ration card in tamil





திருமணம் ஆனவர்கள் புதிய ரேசன் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமானால் பழைய ரேசன் கார்டிலிருந்து அவர்களது பெயரை நீக்கினால் தான் புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆகவே ரேசன் கார்டில் தேவையான குடும்ப உறுப்பினரின் பெயரை நீக்குவது அவசியமான ஒன்றாகும்.

ரேசன் கார்டில் இருந்து குடும்ப உறுப்பினரை நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.tnpds.gov.in/login.xhtml

2. தற்போது தோன்றும் பக்கத்தில் ரேசன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்சாவையும் உள்ளிட்டு பதிவு செய் பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி யை உள்ளிட்டு பதிவு செய் பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் குடும்ப உறுப்பினரை நீக்க பகுதியின் கீழ் திருமண சான்றிதழ் என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

5. தங்களின் திருமண பத்திரிக்கையை ஸ்கேன் செய்து JPG ஃபைலாக 1 MB க்குள் சேவ் செய்து வைத்துக் கொண்டு அதை File Chosen என்ற பகுதியில் இந்த ஃபைலை அப்லோட் செய்யுங்கள்.

6. காரணம் என்ற பகுதியில் திருமணம் என்று குறிப்பிடுங்கள்.

7. நீக்க வேண்டிய குடும்ப உறுப்பினரின் பெயருக்கு எதிரில் உள்ள தேர்வுப் பெட்டியில் டிக் செய்யுங்கள்.

8. அடுத்து உறுதிப்படுத்தல் கீழ் உள்ள தேர்வு பெட்டியில் டிக் செய்து பதிவு செய்ய என்ற பட்டனை அழுத்துங்கள்.

9. தற்போது குடும்ப உறுப்பினரை நீக்கியதற்கான குறிப்பு எண்ணுடன் விவரம் தோன்றும்.

10. அந்தப் பக்கத்தை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment