Inaiya Sevaigal: Passport apply online | how to apply passport online | how to apply passport online in tamil

Passport apply online | how to apply passport online | how to apply passport online in tamil


ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.



1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/user/RegistrationBaseAction?request_locale=en

2. Register to apply at என்ற இடத்தில் Passport office என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

3. Passport office என்ற இடத்தில் உங்கள் அருகாமையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்ந்தெடுங்கள்.

4. அடுத்து பெயர், பிறந்த தேதி, இமெயில் முகவரி ஆகியவற்றை உள்ளிடுங்கள்.

5. உங்களது இமெயில் முகவரியே லாக் இன் ஐடி ஆக இருக்க வேண்டுமெனில் Do you want your login Id to be same as Email Id என்ற தேர்வு பெட்டியில் Yes என்று கொடுங்கள். இல்லையெனில் No என்று கொடுங்கள்.

6. அடுத்து லாக் இன் ஐடி, பாஸ்வேர்ட் கொடுங்கள்.

7. அடுத்து ஏதேனும் Hint Question ஐ தேர்ந்தெடுத்து Hint Answer கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

8. தற்போது கேப்சாவை உள்ளிட்டு Register பட்டனை அழுத்துங்கள்.

9. தற்போது கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து லாக் இன் செய்யுங்கள்.

https://portal1.passportindia.gov.in/AppOnlineProject/user/userLogin

10. தற்போது Apply for Fresh Passport / Re issue of Passport என்ற லின்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.

11. விவரங்களை உள்ளிடுட்டு Submit பட்டனை அழுத்துங்கள்.

12. தற்போது Pay and Schedule Appointment என்ற லின்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.

13. கிரெடிட் கார்டு, நெட் பேன்க்கிங் மூலம் உரிய தொகையை செலுத்துங்கள்.

14. தற்போது Print Application Receipt என்ற லின்க் ஐ அழுத்துங்கள்.

15. ARN எனப்படும் Application Reference Number அடங்கிய அப்ளிகேசன் ரசீதை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

16. தற்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் உரிய உண்மை ஆவணங்களுடன் இந்த அப்ளிகேசன் ரசீதையும் எடுத்துக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுத்த பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்லுங்கள்.

No comments:

Post a Comment