உங்களுடைய ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய வேண்டுமா?
1. முதலில் கீழ்க்கண்ட லின்க் வழியாக உள்ளே செல்லுங்கள்.
http://getaadhar.in/download-your-e-aadhar-card/
2. இந்தப் பக்கத்தின் உள்ளே சென்றவுடன், நீங்கள் எதன் வழியாக ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆதார் எண், என்ரோல்மென்ட் எண் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். உடனே மற்றொரு பக்கத்திற்கு செல்லும். அந்தப் பக்கத்தின் கீழ் இருக்கும் டவுன்லோட் ஆதார் என்பதை தேர்ந்தெடுங்கள்.
3. I have என்பதற்கு பக்கத்தில் இருக்கும் ஆதார் எண், விரிட்சுவல் எண், என்ரோல்மென்ட் எண் இதில் ஏதெனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
4. அடுத்ததாக Select your Preference என்ற இடத்தில் Regular Aadhaar அல்லது Masked Aadhaar என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். ரெகுலர் ஆதாரில் ஆதார் எண் தெரியும். மாஸ்க்டு ஆதாரில் ஆதார் எண்ணுக்கு பதிலாக XXXX என்று இருக்கும். கடைசி எண் மட்டும் தான் தெரியும். பெரும்பாலும் ரெகுலர் ஆதார் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
5. அடுத்ததாக ஆதார் எண், விரிட்சுவல் எண், என்ரோல்மென்ட் எண் இதில் எதை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களோ? அந்த எண்ணை உள்ளீடுங்கள்.
6. அடுத்ததாக ஆதாரில் உள்ளவாறு உங்கள் முழுப் பெயரை உள்ளிடுங்கள்.
7. அடுத்ததாக உங்கள் பின்கோடை உள்ளிடுங்கள்.
8. அடுத்ததாக அங்குள்ள சிறிய பெட்டியில் இருக்கும் 5 இலக்க கேப்சாவை உள்ளிடுங்கள்.
9. அடுத்ததாக கீழே உள்ள ரிக்வஸ்ட் ஓடிபி என்பதை க்ளிக் செய்யுங்கள். உடன் ஒரு உரையாடல் பெட்டித் தோண்றும் அதில் I Agree என்பதை தேர்ந்தெடுங்கள்.
10. உடனே ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணின் கடைசி 4 இலக்கத்தை காண்பித்து இந்த மொபைலுக்கு ஓடிபி அனுப்பலாமா என்று கேட்கும். நீங்கள் Confirm என்பதை தேர்ந்தெடுங்கள். பின் உங்கள் மொபைல் எண்ணுக்கு 6 இலக்க ஓடிபி எண் வரும்.
11. அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்யுங்கள்.
12. அடுத்ததாக கீழே உள்ள டவுன்லோட் ஆதார் என்பதை தேர்ந்தெடுங்கள்.
13. தற்போது உங்கள் டவுன்லோட் செய்யப்பட்டு விட்டது.
14. உங்கள் பாஸ்வேர்ட் ஆல் பாதுகாக்கப்பட்டு இருக்கும். உங்கள் ஆதாரில் உள்ள உங்கள் பெயரின் முதல் 4 எழுத்தின் கேப்பிட்டல் எழுத்துடன் உங்கள் பிறந்த வருடத்தையும் சேர்ப்பதே பாஸ்வேர்ட் ஆகும். உதாரணமாக உங்கள் பெயர் Nagalingam Ramalingam மற்றும் உங்கள் பிறந்த தேதி 12.07.1944 என்றால் உங்களது பாஸ்வேர்ட் NAGA1944 ஆகும்.
15. உங்களது ஆதார் தயார்.
No comments:
Post a Comment