Inaiya Sevaigal: இ - வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?

இ - வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?


1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.



2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு அதன் கீழே உள்ளே கேப்சாவை உள்ளிட்டு சென்ட் ஓடிபி பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு வெரிஃபை பட்டனை அழுத்துங்கள்.

4. உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை எண் (எபிக் எண்) உள்ளதா? இல்லையா என்பதை தேர்வு செய்யுங்கள்.

5. உங்களின் இமெயில் முகவரி, உங்களுக்கான பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிடுங்கள். பாஸ்வேர்ட் ஆனது ஒரு பெரிய எழுத்து, ஒரு சிறிய எழுத்து, ஒரு சிறப்பு எழுத்து, ஒரு எண் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. தற்போது ரெஜிஸ்டர் பட்டனை அழுத்துங்கள்.

7. தற்போது லாக் இன் பட்டனை அழுத்துங்கள். அல்லது கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.



8. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட் மற்றும் கேப்சாவை உள்ளிட்டு லாக் இன் பட்டனை அழுத்துங்கள்.

9. தற்போது தோன்றும் பக்கத்தில் டவுன்லோட் இ எபிக் என்ற பட்டனை அழுத்துங்கள்.

10. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது எபிக் எண் மற்றும் உங்களது மாநிலத்தின் பெயரை உள்ளிட்டு சேர்ச் பட்டனை அழுத்துங்கள்.

11. உங்களது இ வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

(குறிப்பு :  தற்போது நவம்பர் 2020 க்கு பிறகு பெயர் சேர்த்தவர்களுக்கு மட்டுமே வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். மற்றவர்கள் தற்போது டவுன்லோட் செய்ய இயலாது. ஆனால் வெகு விரைவில் டவுன்லோட் செய்யும் வசதி வழங்கப்படும்)

No comments:

Post a Comment