Inaiya Sevaigal: How to apply PF online in tamil | PF online apply | PF online payment

Date

Disable Ctrl+P

How to apply PF online in tamil | PF online apply | PF online payment




1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/


2. தற்போது தோன்றும் பக்கத்தில் யூஏஎன் எண்ணையும் பாஸ்வேர்ட் ஐ யும் உள்ளிட்டு லாக் இன் செய்யுங்கள்.

3. முதன் முதலாக லாக் இன் செய்பவர் என்றால் பர்கெட் பாஸ்வேர்ட் கொடுத்து யூஏஎன் எண்ணை உள்ளிட்டு பாஸ்வேர்ட் செட் செய்யுங்கள். அதன் பின் லாக் இன் செய்யுங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் ஆன்லைன் சர்வீஸ் தொகுதியில் க்ளெய்ம் என்ற பட்டனை தேர்வு செய்யுங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் யூஏஎன் உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண்ணை உள்ளிட்டு வெரிஃபை பட்டனை அழுத்துங்கள்.

6. தற்போது புரசீட் பட்டனை அழுத்துங்கள்.

7. தற்போது தோன்றும் பக்கத்தில் பணம் எதற்காக எடுக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்.

8. எவ்வளவு பணம் வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள். அதிகபட்சமாக 75 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

9. பிறகு தங்களின் வங்கி பாஸ்புத்தகத்தை 500 கேபி க்குள் அப்லோட் செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

10. உங்களது விண்ணப்பம் அனுப்பப்பட்டு விட்டது. 3 நாட்களுக்குள் உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேர்ந்து விடும்.

No comments:

Post a Comment