Inaiya Sevaigal: 80 சி பிரிவில் 1,50,000 கழித்த பிறகு மேலும் கழித்துக்கொள்ள உள்ள திட்டங்கள்

80 சி பிரிவில் 1,50,000 கழித்த பிறகு மேலும் கழித்துக்கொள்ள உள்ள திட்டங்கள்


80 சி பிரிவில் 1,50,000 கழித்த பிறகு மேலும் கழித்துக்கொள்ள உள்ள திட்டங்கள்

1. தேசிய பென்ஷன் பண்ட் திட்டங்களில் 50,000 ரூபாய் வரையில் முதலீடு வரி சலுகையைப் பெறலாம். 

2. மருத்துவக் காப்பீடு மூலம் வருடம் 25,000 ரூபாய் அளவிலான தொகைக்கும், பெற்றோர்களுக்கான மருத்துவக் காப்பீடு மூலம் மற்றொரு 25,000 ரூபாய்க்கும் வருமான வரிச் சலுகை பெறலாம். 

3. வீட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி தொகைக்கு வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரிச் சலுகை பெறலாம். 

4. வங்கி அல்லது தபால் நிலையத்தில் செய்யப்படும் டெப்பாசிட் தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தில் 10,000 ரூபாய் வரையில் வரிச் சலுகை பெறலாம். 

5. கல்விக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி தொகைக்கு முழுமையான வரிச் சலுகை பெற முடியும். 

6. குடும்ப உறுப்பினர்களின் உடல் ஊனமுற்ற சிகிச்சைக்காக வருடம் 75,000 ரூபாய் வரையிலான செலவுகளுக்கு வரிச் சலுகையைப் பெற முடியும். 

7. இதேபோல் ஏய்ட்ஸ் அல்லது கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு 40,000 ரூபாய் வரையிலான சிகிச்சை செலவிற்கு வரிச் சலுகை பெற முடியும். 

8. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதன் மூலம் வருடம் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும்.

No comments:

Post a Comment