Inaiya Sevaigal: மத்திய பட்ஜெட் 2021 - முழு விபரம்

மத்திய பட்ஜெட் 2021 - முழு விபரம்


1. சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 137 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.2.23 லட்சமாக உயர்வு.
2. கரோனா தடுப்பூசி வழங்குவதற்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
3. இந்தியாவில் 2 கரோனா தடுப்பூசிகள் உள்ளன, கூடுதல் 2 தடுப்பூசிகள் வர உள்ளன.
4. 2021-22ஆம் நிதியாண்டில் முதலீட்டுச் செலவு ரூ.4.39 லட்சம் (நடப்பு நிதியாண்டு) கோடியிலிருந்து ரூ.5.54 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
5. நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்டில் 3.5 சதவீதம் மதிப்பிடப்பட்ட நிலையில் நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதமாக அதிகரிப்பு.

6. 2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 6.8 சதவீதமாக நிர்ணயம்.
7. 2025-26ஆம் நிதியாண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழாகக் குறைக்க திட்டம்.
8. வரிவிதிப்பு முறை: 75 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ஐடி ரிட்டர்ன் தாக்கல் கட்டாயமில்லை, வங்கிகளே டிடிஎஸ் பிடிக்கும்.
9. வருமானவரி ரிட்டர்ன் செலுத்துவோர் எண்ணிக்கை 2020ல் 6.48 கோடியாக அதிகரிப்பு. 2014-ல் 3.31 கோடியாக இருந்தது.
10. 2021-22ஆம் நிதியாண்டில் உருவாக்கப்படும் தற்சார்பு சுகாதாரத் திட்டத்துக்காக ரூ.64,180 கோடி ஒதுக்கீடு.

11. வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இறக்குமதி தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் வரி, ஆப்பிள்கள் மீது 35 சதவீதம் வரி.

12. இறக்குமதி செய்யப்படும் கபுலி சென்னா மீது 30 சதவீதம் வரி, பருப்பு மீது 10 சதவீதம் வரி, பெங்கால் பருப்பு மீது 20 சதவீதம் வரி, பருத்தி மீது 5 சதவீதம் வரி வேளாண் கட்டமைப்புக்காக விதிப்பு.
13. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 வரி, டீசல் மீது ரூ.4 வரி விதிப்பு.
14. புதிய வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு வரி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
15. அடுத்த ஓராண்டுக்கு வீட்டுக் கடனில் ரூ.1.50 லட்சம் வரி கழிவு நீட்டிப்பு.

16. டிஜிட்டல் முறையில் உற்றுமுதல் செய்யும் நிறுவனங்கள் வரி தணிக்கை விலக்கு ரூ.10 கோடியாக அதிகரிப்பு
17. 400 பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
18. சோலார் கருவிகள், ஆட்டோமொபைல் பாகங்கள் மீது சுங்கவரி விதிப்பு
19. காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதமாக அனுமதி. முன்பு 49 சதவீதமாக இருந்தது.
20. அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அடுத்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடிவு.

21. வங்கிகளுக்கு மறு முதலீட்டுக்கு அடுத்த நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி.
22. கட்டமைப்புக்கான நிதி திரட்டுவதற்காக மேம்பாட்டு நிதிக் கழகம் ரூ.20 ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும்.
23. வர்த்தகரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், அதற்கு தகுதிச்சான்று, தனிநபர் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருந்தால் அதற்கு தகுதிச்சான்று.
24. டிஜிட்டல் முறையில் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.3,726 கோடி ஒதுக்கீடு.
25. அசாம், மேற்கு வங்க தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் நலனுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு

26. 2021-22ஆம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 846 கோடி ஒதுக்கீடு. இது நடப்பு நிதியாண்டில் ஒதுக்கிய தொகையான ரூ.94,542 கோடியை விட 137 சதவீதம் அதிகம்.
27. அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.2.87 லட்சம் ஒதுக்கீடு.
28. நகர்ப்புற ஸ்வச் பாரத் திட்டத்துக்காக (2.0) ரூ.1.41,678 கோடி ஒதுக்கீடு.
29. 10 லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும் 42 பெருநகரங்களில் காற்று மாசைக் குறைக்க ரூ.2,217 கோடி ஒதுக்கீடு.

30. 13 துறைகளில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி.

31. நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து துறைக்கு ரூ.1,18,101 லட்சம் கோடி.
32. ரயில்வே துறைக்கு ரூ.1,10,055 கோடி ஒதுக்கீடு.
33. சோலார் மின்சக்திக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி முதலீடு.
34. கிராமப்புற அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.40 ஆயிரம் கோடி.
35. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றத்துக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கீடு.

பட்ஜெட் முக்கிய விளக்கங்கள்

1. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.50 வரியும், டீசல் மீது ரூ.4 வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரியால் நுகர்வோருக்கு எந்தவிதமான கூடுதல் சுமையும் இருக்காது. அதேநேரத்தில் பெட்ரோல்,டீசல் மீதான அடிப்படை சுங்கவரியும், சிறப்பு கூடுதல் சுங்க வரியும் குறைக்கப்பட்டு இருப்பதால், நுகர்வோருக்குக் கூடுதல் சுமை இருக்காது.

2. ''இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் வேளாண் கட்டமைப்பு வரி புதிதாக விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 100 சதவீதம் வரி, கச்சா பாமாயில் மீது 17.5 சதவீதம் கட்டமைப்பு வரி, நிலக்கரி, லிக்னைட் ஆகியவை மீது 1.50 சதவீதம் வரி, உரம், யூரியா ஆகியவை மீது 5 சதவீதம், பருத்தி மீது 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்தப் பொருட்களின் விலை வருங்காலத்தில் உயரலாம்.

பெட்ரோல், டீசல், மதுபானங்கள் மீது புதிய வரி விதிக்கப்பட்டாலும், அடிப்படை சுங்கவரி குறைக்கப்பட்டதால் விலை உயர்வுச் சுமை நுகர்வோர் மீது இருக்காது. அதனால் பெட்ரோல், டீசல், மதுபான விலை உயராது.

3. 400 வரி விலக்குகளை ஆய்வு செய்து இந்த ஆண்டு சுங்க தீர்வையை சீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாற்றியமைக்கப்படும் சீரான சுங்கத் தீர்வை முறையை கொண்டுவர 2021 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.

மொபைல் போன்களுக்கான மின் ஊக்கிகள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான சில வரி விலக்குகளை திரும்பப் பெறுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். சில வகை உதிரிப்பாகங்களுக்கு மிதமான வகையில் 2.5 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

துருப்பிடிக்காத உருக்கு, உலோகக் கலப்பு மற்றும் உலோகக் கலப்பற்ற பொருட்களுக்கு ஒரே சீராக 7.5 சதவீதம் என்ற விதத்தில் சுங்கத் தீர்வை குறைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். தாமிரப்பட்டைக்கான சுங்கத்தீர்வை ஐந்து சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

மனிதர்கள் உருவாக்கும் ஜவுளிகளுக்கான மூலப்பொருட்கள் மீதான வரியை சீராக்கும் வகையில், பாலியெஸ்டர், நார்ப்பொருட்கள், நைலான் வகைக்கு ஐந்து சதவீதம் என்ற சீரான வரி விதிக்கப்படும். இது ஜவுளித்துறை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும் என்று அமைச்சர் கூறினார். தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கத் தீர்வை சீரமைப்பையும் அமைச்சர் அறிவித்தார்.

சூரியசக்தி தகடுகள், மற்றும் மின் ஊக்கிகளை படிப்படியாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் சூரியசக்தி மாற்றிகள் மீதான வரியை ஐந்து சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார்.

இதே போல சூரியசக்தி விளக்குகள் மீதான தீர்வையும் ஐந்து சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கனரக உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளப்பரிய ஆற்றல் உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், சுரங்கம் தோண்டும் எந்திரத்திற்கு வரி விலக்கு அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். சிலவகை வாகன உதிரிப் பாகங்களுக்கு 15 சதவீதம் அளவுக்கு வரி உயர்வை அவர் அறிவித்தார்.

இரும்புத் திருகாணிகள், பிளாஸ்டிக் கட்டுமானப் பொருட்கள், இறால் மீனுக்கான உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான தீர்வை 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், பருத்திக்கு பத்து சதவீதம் என்ற அளவுக்கும், கச்சாப் பட்டு, பட்டு நூல் ஆகியவற்றுக்கு 15 சதவீதம் அளவுக்கும் சுங்கத் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களுக்கு வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் எனப்படும் கூடுதல் வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வரியை விதிக்கும் போது நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாத வண்ணம் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தங்கம், வெள்ளி, ஆல்கஹால் கலந்த திரவங்கள், கச்சா பனை எண்ணெய், கச்சா சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், ஆப்பிள், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சிலவகை உரங்கள், பட்டாணி, காபூல் கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை, பருத்தி ஆகியவை இந்த வரி வரிவிதிப்பின் கீழ் வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

4. பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக PMS-SC என்னும் பள்ளிக்குப் பிறகான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ரூ.2.50 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள பட்டியலினப் பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ''தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டத்தை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். இதுதொடர்பாக மத்திய அரசின் உதவி மேம்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.35,219 கோடி போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 4 கோடி மாணவர்கள் பயன்பெறுவர்.

5. ''தனியார் பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நாட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 15 ஆயிரம் பள்ளிகள் வலுப்படுத்தப்படும்.

5 ஆண்டுகளுக்கு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். லடாக்கின் லே பகுதியில் புதிதாக மத்தியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

அரசு ஆவணங்களும் கொள்கை முடிவுகளும் இந்திய மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தேசிய மொழி மாற்ற மையம் உருவாக்கப்படும். அதேபோல உயர் கல்வியைக் கண்காணிக்க தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்.

மாணவர்களின் ஊட்டச்சத்தைப் பலப்படுத்த மிஷன் போஷன் 2.0 அறிமுகம் செய்யப்படும். போஷன் அபியான் திட்டத்துடன் துணை ஊட்டச்சத்து திட்டத்தை இணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். துணை ஊட்டச்சத்து திட்டம் அங்கன்வாடிகள் மூலம் அமல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் பழங்குடியினப் பகுதிகளில் 750 ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும். அதேபோல ஒவ்வொரு ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிக்கும் வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் ரூ.20 கோடி நிதி, ரூ.38 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். பழங்குடியின மாணவர்கள் படிக்கும் மலைப்பகுதிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, ரூ.48 கோடியாக உயர்த்தப்படும்''.

6. தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

7. தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடத்திற்கான நெடுஞ்சாலை அமைக்க 1.03 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை முதல் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

8. சமீப காலங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டத்திற்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்க நிதி ஊக்கத்தை வழங்கும்.

2019ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையின்போது, ஒரு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (என்ஆர்எஃப்) தொடங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. என்ஆர்எஃப் செலவினம் ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடியாக இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த ஆராய்ச்சிக்கான சூழல் வலுப்பெறுவதை இது உறுதி செய்யும்.

புதிய முயற்சியாக தேசிய மொழிபெயர்ப்புப் பணி மேற்கொள்ளப்படும்''.

9. மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

10. வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு. புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.

பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு

No comments:

Post a Comment