தங்கம் விலையை இந்தியாவில் எவ்வாறு நிர்ணயம் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
இந்தியாவில் தங்கம் திங்கள் முதல் சனி வரை உள்ள வேலை நாட்களில் காலை 11 மணிக்கு ஒரு முறையும் மாலை 3 மணிக்கு ஒரு முறையும் என ஒரு நாளைக்கு இரு முறை விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.
சர்வதேச தங்கம் விலையை அடிப்படையாக கொண்டு தான் தங்கம் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.
சர்வதேச தங்கம் விலையை நிர்ணயம் செய்வது The London Bullion Market ஆகும். இங்கு லண்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கும் (இந்தியா நேரப்படி மாலை 3.00 மணி) மாலை 3.00 மணிக்கும் (இந்திய நேரப்படி இரவு 07.30 மணி) விலையை நிர்ணயம் செய்வார்கள். இங்கு தங்கம் விலை அமெரிக்க டாலரில் நிர்ணயம் செய்யப்படும். தங்கம் விலையை ஒரு அவுன்ஸ் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படும். ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 31.1 கிராம் ஆகும். The London Bullion Market நிர்ணயம் செய்யும் தற்போதைய விலையை அறிய இங்கே இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://www.lbma.org.uk/precious-metal-prices#/table
 
        
இந்தியாவில் தங்கம் விலையை நிர்ணயம் செய்வது Indian Bullion Jewelers Association தங்கம் விலையை நிர்ணயம் செய்கிறது. இந்தியாவில் தங்கம் விலை காலை 11 மணிக்கும் மாலை 3 மணிக்கும் நிர்ணயம் செய்யப்படும். Indian Bullion Jewelers Association நிர்ணயம் செய்யும் தற்போதைய விலையை அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
தங்கம் விலையை எவ்வாறு நிர்ணயம் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட விலை நிர்ணயம் ஆனது 24 காரட் அதாவது 99.9 தரத்திலான தூய தங்கத்தின் விலை ஆகும்.
இன்றைய அமெரிக்க டாலரின் மதிப்பு
1 டாலர் = 73.25 ரூபாய் ஆகும்.
இன்றைய தங்கத்தின் விலை நிர்ணயம்
1 அவுன்ஸ் = 1937.600 டாலர்.
அதாவது 31.1 கிராம் தங்கம் = 1937.600 டாலர்.
எனவே 1 கிராம் தங்கம் = 1937.6 / 31.1
                                                  =  62.30 டாலர்
இதன் ரூபாய் மதிப்பு = 62.30 x 73.25
                                              = 4563.475
இதற்கு 12.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. தங்கம் இந்தியாவில் இருந்தாலும் இறக்குமதி வரி சேர்த்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
12.5 சதவீத இறக்குமதி வரி = 570.43
ஆக 1 கிராம் தங்கத்திற்கு நிர்ணயம் செய்யப்படும் விலை = ரூ. 5,133.90 ஆகும்.
No comments:
Post a Comment