Inaiya Sevaigal: மிக எளிமையாக தவறு இல்லாமல் EMIS தளத்தில் TC உருவாக்குவது எப்படி?

மிக எளிமையாக தவறு இல்லாமல் EMIS தளத்தில் TC உருவாக்குவது எப்படி?


1. கீழ்க்காணும் EMIS தளத்தில் தங்கள் பள்ளியின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து முதலில் லாக் இன் செய்து கொள்ளுங்கள்.

https://emis.tnschools.gov.in/dashboard

2. தற்போது தளத்தின் இடது பக்கத்தில் உள்ள Students என்ற பகுதியில் உள்ள Students list என்பதை தேர்வு செய்யுங்கள்.

3. தற்போது தங்களுக்கு தேவையான மாணவனின் பெயருக்கு எதிரே உள்ள ஆக்சன் என்ற கலத்தில் உள்ள பென்சில் சின்னத்தை க்ளிக் செய்யுங்கள்.

4. தற்போது மாணவனின் அனைத்து விபரங்களும் தோன்றும் அனைத்தும் தங்கள் பள்ளி சேர்க்கைப் பதிவேட்டில் உள்ளவாறு இருக்கிறதா? என சரிபாருங்கள்.

5. ஏதேனும் தவறாக இருந்தால் அவற்றை சரி செய்து சேவ் பட்டனை அழுத்துங்கள்.

6. தற்போது தளத்தின் இடது பக்கத்தில் உள்ள Students TC details என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள்.

7. தற்போது தங்களுக்கு தேவையான மாணவனின் பெயருக்கு எதிரே உள்ள ஆக்சன் என்ற கலத்தில் உள்ள பென்சில் சின்னத்தை க்ளிக் செய்யுங்கள்.

8. தற்போது தோன்றும் பக்கத்தில் மாணவனின் அங்க அடையாளம், உதவித் தொகை பெற்ற விபரம், மருத்துவ ஆய்வு நடைபெற்ற தேதி, மாணவனின் பண்பு நலன், அடுத்த வகுப்புக்கான தேர்ச்சி நிலை, எந்த வகுப்பிலிருந்து படிக்கும் நிலை, பள்ளியில் சேர்ந்த தேதி, பள்ளிக்கு வந்த கடைசி தேதி, முதல் மொழி விபரம், பயிற்று மொழி விபரம், எழுத்தால் பிறந்த தேதி (கட்டாயமில்லை. உள்ளிடாமலும் இருக்கலாம்.), தேசியம், சாதி நிலை, டிசி விண்ணப்பித்த தேதி, டிசி வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை உள்ளிட்டு சேவ் பட்டனை அழுத்துங்கள்.

9. தற்போது அந்த மாணவனுக்கு எதிரே ஆக்சன் கலத்தில் பென்சன் சின்னத்திற்கு பக்கத்தில் பச்சை வண்ண அம்புக்குறி சின்னம் தோன்றும்.

10. அந்த அம்புக்குறி சின்னத்தை க்ளிக் செய்தால் மாணவனுக்கு டிசி வழங்க வேண்டிய காரணத்தை கேட்கும். அதற்குரிய விபரத்தை உள்ளிட்டு சேவ் பட்டனை அழுத்துங்கள்.

11. தற்போது அந்த மாணவன் பள்ளியிலிருந்து Common Pool ற்கு சென்று விடுவான்.

12. தற்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் திரையில் மேல் பாகத்தில் பார்த்தால் Current Student list மற்றும் Past Student list என்று இருக்கும்.

13. தற்போது Past Student list என்ற தொகுதியை க்ளிக் செய்யுங்கள்.

14. தற்போது நாம் டிசி கொடுக்க தகவல் உள்ளிட்ட மாணவர்களின் விபர பட்டியல் தோன்றும்.

15. தற்போது மாணவனுக்கு எதிரே ஆக்சன் கலத்தில் பிடிஎஃப் உருவத்துடன் கூடிய நீல நிற சின்னம் தெரியும்.

16. அந்த நீல நிற பிடிஎஃப் சின்னத்தை க்ளிக் செய்தால் அந்த மாணவனின் டிசி தானாக தங்கள் கணிணியில் டவுன்லோட் ஆகும்.

17. அந்த டிசி யை பச்சை வண்ண லீகல் தாளில் பிரின்ட் எடுத்து மாணவனுக்கு வழங்குங்கள்.

No comments:

Post a Comment