Environment Impact Assessment என்பதன் சுருக்கமே EIA என்பதாகும். இதன் தமிழாக்கம் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு என்பதாகும். இந்த சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பாக ஏற்கனவே சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவே அதாவது வரைவுச் சட்டமே சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 (EIA Draft 2020) என அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்.
தற்போது நடைமுறையில் உள்ள இஐஏ சட்டம்:
இஐஏ என்றால் என்ன
ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தை தொடங்கும் முன் மத்திய அரசிடம் இஐஏ அறிக்கையை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இஐஏ என்றால், அவர்களின் நிறுவனங்கள் குறித்த அடிப்படை விவரங்களை அரசிடம் அளிப்பது. அதாவது எங்கள் தொழிற்சாலை இந்த இடத்தில் அமைய உள்ளது. இத்தனை ஏக்கரில் அமைய இருக்கிறது. இங்கே இத்தனை பேர் வசிக்கிறார்கள். நாங்கள் கழிவுகளை குடிநீரில் வெளியேற்ற மாட்டோம். அருகே இந்த மலை இருக்கிறது. எவ்வளவு தூரத்தில் விவசாய நிலம் இருக்கிறது , என்று இஐஏ அறிக்கையில் அந்த நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசு என்ன செய்யும்
இந்த இஐஏ அறிக்கையை பார்த்துவிட்டு, மத்திய அரசு சில விதிகளை தெரிவிக்கும். முதல் விஷயம் அது பெரிய எண்ணெய் எடுக்கும் திட்டம், தொழிற்சாலை அமைக்கும் திட்டம், மின்சாரம் அமைக்கும் திட்டம், மலையை குடையும் குவாரி அமைக்கும் திட்டம் போன்ற திட்டமாக இருக்கும் பட்சத்தில், அதற்கு அரசு அனுமதி மட்டுமின்றி மக்கள் அனுமதியும் வேண்டும். அதேபோல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் விளக்கம் அளிக்க வேண்டியதும் அவசியம்.
கட்டாயம் அந்த திட்டம் குறித்து முழுக்க முழுக்க விவரங்களை மக்களிடம் அந்த நிறுவனம் தெரிவிக்கும். இதில் மக்கள் தெரிவிக்கும் கருத்து அதன்பின் அரசு தெரிவிக்கும் கருத்து, இதன் பாதிப்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும். ஒரு தொழிற்சாலை உங்கள் கிராமத்தில் இருக்கும் வயலில் தொடங்கப்படுமா, இல்லை தொடங்க முடியாதா என்பதை இந்த இஐஏ அறிக்கைதான் முடிவு செய்யும். இஐஏ அறிக்கை ஒரு தொழிற்சாலைக்கு எதிராக இருந்தால் அதை தொடங்க முடியாத நிலை கூட ஏற்படும். இப்போது புரிந்து இருக்கும் இந்த இஐஏ அறிக்கை ஏன் முக்கியம் என்று.
திருத்தப்படும் இஐஏ சட்ட முன் வடிவு 2020 ன் விபரம்:
முதல் திருத்தம்
திருத்தம் ஒன்று எப்படி? அதன்படி முதல் திருத்தம், இதன் வெளிப்படைத்தன்மை. இஐஏ மூலம் ஒரு தொழிற்சாலை திட்டத்தை "மூலோபாய திட்டம்" (strategic plan) என்று அறிவித்துவிட்டால், அந்த திட்டத்திற்கு எந்த அனுமதியும் தேவை இல்லை. அதாவது இது தேச பாதுகாப்பு தொடர்பானது என்றால் அதை பற்றி மக்களிடம் தெரிவிக்க தேவையில்லை. மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை. மக்களிடம் கருத்து கேட்காமலே, இஐஏ அறிக்கையில் விவரங்களை தெரிவிக்காமலே ஒரு தொழிற்சாலையை தொடங்கலாம். உதாரணமாக ஒரு எண்ணெய் எடுக்கும் திட்டம் மூலோபாய திட்டத்தின் கீழ் வந்தால் அதை பற்றி மக்களிடம் தெரிவிக்காமலே, ஒரு ஊரில் எண்ணெய் எடுக்க நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளிக்க முடியும்.
இரண்டாவது திருத்தம்
இரண்டாவது திருத்தம் அடுத்ததாக ஒரு மின்சார திட்டம் அல்லது நீர் மின்சார திட்டம் 25 மெகாவாட் மின் உற்பத்திக்கு குறைவாக செய்தால், அதற்கு இஐஏ மூலம் மக்கள் அனுமதியை பெற தேவையில்லை.
மூன்றாவது திருத்தம்
மூன்றாவது திருத்தம் முன்பே இருந்த இஐஏ முறைப்படி ஒரு திட்டத்தின் அறிக்கையை சமர்பித்துவிட்டு, அதன்பின் அனுமதி கிடைத்ததால்தான் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆனால் இனி வரும் நாட்களில் முதலில் திட்டத்தை தொடங்கிவிட்டு, அதன்பின் மத்திய அரசிடம் இஐஏ சமர்ப்பிக்கலாம். அதை மத்திய அரசு ஆராய்ந்துவிட்டு குழு ஒன்றை உருவாக்கி முடிவை எடுக்கும்.
நான்காவது திருத்தம்
நான்காவது திருத்தம் நான்காவது திருத்தம் என்று பார்த்தால், ஒரு தொழிற்சாலையின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் விஷயம் ஆகும். பொதுவாக ஒரு தொழிற்சாலையை தொடங்கப்பட்ட பின் அதன் நிலைமை, செயல் திறன் , கழிவு வெளியேற்றம் குறித்த விவரங்களை வருடத்திற்கு இரண்டு முறை வெளியிட வேண்டும். ஆனால் இனி புதிய இஐஏ திருத்தம் மூலம் ஒரு தொழிற்சாலை எப்படி செயல்படுகிறது என்பதை வருடத்திற்கு ஒரு முறை தெரிவித்தால் போதும்.
ஐந்தாவது திருத்தம்
ஐந்தாவது திருத்தம் இதன்படி 2000-10000 ஏக்கர் நிலத்திற்குள் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் அதற்கு இஐஏ அனுமதி தேவை இல்லை. அதேபோல் மக்கள் அனுமதியும் தேவை இல்லை. இஐஏ அறிக்கை சமர்பிக்காமலே 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், மக்களிடம் கருத்து கேட்காமல் ஒரு தொழிற் சாலையை தொடங்க முடியும். இதுதான் இந்த புதிய இஐஏ வரைவில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள் ஆகும்.
மேலும் விபரங்களுக்கு
ஒன் இந்தியா தமிழ்
https://tamil.oneindia.com/news/chennai/eia-all-you-need-to-know-about-environmental-impact-assessment/articlecontent-pf474562-392481.html
பிபிசி தமிழ்
https://www.bbc.com/tamil/india-53550338
விக்கிபீடியா
https://en.wikipedia.org/wiki/Environmental_impact_assessment
No comments:
Post a Comment