Inaiya Sevaigal: இலவச வீடு திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இலவச வீடு திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?




பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

https://pmaymis.gov.in/Open/Check_Aadhar_Existence.aspx?comp=b

2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணையும் ஆதாரில் உள்ளபடி உங்கள் பெயரையும் உள்ளிட்டு கீழே உள்ள தேர்வு பெட்டியை டிக் செய்து செக் என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது தோன்றும் விண்ணப்பப் படிவத்தில் உங்களின் மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர், பெயர், தந்தை பெயர், சர்வே எண், பாலினம், முகவரி, தொலைபேசி எண், திருமண நிலை, குடும்ப உறுப்பினர்கள் பெயர் ஆதார் விபரம், வங்கி கணக்கு விபரம், வசிக்கும் வருட விபரம், தொழில், உறுதிமொழி ஆகிய விவரங்களை உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு சேவ் பட்டனை அழுத்துங்கள்.

4. தங்களின் விண்ணப்பத்திற்கு விண்ணப்ப எண் காண்பிக்கும். அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

5. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உங்களின் விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு உங்களின் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

https://pmaymis.gov.in/Open/Print_Application_By_applicationNo.aspx


6. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உங்களின் விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு உங்களின் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.

https://pmaymis.gov.in/Track_Application_Status.aspx


No comments:

Post a Comment