Inaiya Sevaigal: கானல் நீதி - சிறுகதை

கானல் நீதி - சிறுகதை




     நல்லூர் என்ற கிராமத்தில் அன்பு, பண்பு என்ற இருவர் வாழ்ந்து வந்தனர். இருவரும் சிறப்பாக விவசாயம் செய்து வந்தனர். இருவரின் விவசாய நிலமும் அருகருகே இருந்ததால் அடிக்கடி எல்லைப் பிரச்சனை வந்தது. ஆகவே இருவரும் ஊர்த்தலைவர் முருகவேலிடம் முறையிடச் சென்றனர். அவர் ஊர்த் தலைவர் என்பதாலும் நடுநிலையோடு நடந்து கொள்ளும் இடத்தில் இருப்பதால் நடுநிலையோடு நியாயம் வழங்குவார் என இருவரும் நம்பினர். ஊர்த்தலைவர் முருகவேலிடம் நல்லூர் கிராமத்தின் நில அளவு வரைபடம் இருந்தது.
     ஒரு நாள் அன்பும் பணபும் ஊர்த்தலைவர் முருகவேலிடம் சென்று எங்கள் இருவருக்கும் அடிக்கடி எல்லைப் பிரச்சனை வருகிறது. தாங்கள் எங்கள் எல்லைகளை காண்பித்து பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு கோரினர். ஊர்த்தலைவர் முருகவேல் தனது கணக்குப்பிள்ளை பாஸ்கரனிடம் நில அளவு வரைபடத்தை எடுத்து வரச் சொன்னார். அதில் அன்புவிற்கு 100 சதுர மீட்டரும், பண்பு விற்கு 100 மீட்டரும் என இருந்தது.
     ஆனால் ஊர்த்தலைவர் முருகவேல் அன்பு வின் அளவு 80 சதுர மீட்டர் பண்பு வின் அளவு 120 சதுர மீட்டர் எனச் சொல்லிவிட்டு சென்றார். இருவருமே அதுதான் தங்களது அளவு என்று தொடர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். வருடங்கள் கடந்தன.
     நல்லூர் கிராமத்தில் மிகப்பெரிய அளவில் பெட்ரோலிய வளங்கள் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்தது. அந்த பெட்ரோலிய வளங்கள் அரபு நாடுகளுக்கு இணையானதாக உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்தது. நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என கூறிய ஊர் மக்கள் தங்களது நிலங்களை மனமுவகையுடன் அரசுக்கு கொடுக்க முன்வந்தனர். அரசு நிலப் பதிவேட்டின் படி நில எடுப்பு செய்யப்பட்டது. அரசு நிலப் பதிவேட்டில் உள்ள நில அளவுகளுக்கு ஏற்ற இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்பட்டது. அப்போது அன்பு விற்கு 100 சதுர மீட்டரும் பண்பு விற்கு 100 சதுர மீட்டரும் உள்ளதென அரசு தெரிவித்து அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கியது.
     அப்போது தான் அன்பு வின் நில அளவு எவ்வளவு என்றும் பண்பு வின் நில அளவு எவ்வளவு என்றும் இருவருக்கும் தெரியவந்தது. நடுநிலையோடு நியாயம் வழங்கிய இடத்தில் இருந்த ஊர்த்தலைவர் முருகவேலின் செயலைக் கண்டு வருத்தம் அடைந்தனர்.

நீதி :  நடுநிலையோடு நீதி வழங்கிய இடத்தில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் நடுநிலைத் தவறாது நீதி வழங்க வேண்டும். தவறுதலாக நீதி வழங்காமல் செயல்பட்டால் இயற்கையானது வேறொரு வழியில் நீதியை தானாக வழங்கிவிடும்.

No comments:

Post a Comment