Inaiya Sevaigal: மிக எளிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகள்

மிக எளிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகள்




மிக எளிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகளை இங்கு பார்ப்போம்.

பெர்மிங்காம் பல்கலைக்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய பயிற்சி.

1. முதல்‌ பயிற்சி : கால்‌ விரல்களை நிலத்தில்‌ ஊன்றி, குதிகால்களை மேலே தூக்கியும்‌, கீழே இறக்கியும்‌ 10 முறை‌ செய்யவும்‌. இந்தப்‌ பயிற்சியை செய்யும்‌போது கீழே விழாமல்‌ இருக்க சுவர்‌ அல்லது ஜன்னலைப்‌ பிடித்துக்‌ கொண்டு செய்யவும்.
2. இரண்‌டாவது பயிற்சி : நேராக நின்று கொண்டு வலது காலை முடிந்தவரை பக்கவாட்டில்‌ உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்கவும்‌. இதைப்‌ போலவே இடது காலை பக்கவாட்டில்‌ உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்கவும்‌. இதுபோல்‌ 10 முறை‌ செய்யவும்‌.
3. மூன்றாவது பயிற்சி : நேராக நின்றுகொண்டு இரண்டு கைகளிலும்‌ சிறிய எடை உள்ள பளுவை எடுத்துக்‌கொண்டு தோள் பட்டை வரை உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்க வேண்டும்‌. இதுபோல்‌ 10 முறை‌ செய்ய வேண்டும்‌.
4. நான்காவது பயிற்சி : ஒரு நாற்காலியில்‌ அமர்ந்துகொண்டு கைகளை முகத்திற்கு நேராக நீட்டிக்கொண்டு 10 முறை உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்‌.
5. ஐந்தாவது பயிற்சி : வீட்டிலுள்ள படிக்கட்டில்‌ 10 முறை ஏறி இறங்க வேண்டும்‌.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.
1. பெரிய நெல்லிக்காய்
2. எலுமிச்சம் பழச்சாறு
3. ஆரஞ்சு
4. சாத்துக்குடி
5. கொய்யா
6. பாதாம்
7. பாகற்காய்
8. தேன்
9. இஞ்சி
10. பூண்டு
11. தயிர்
12. மிளகு
13. மஞ்சள்தூள்
14. குறைந்தது 10 நிமிடம் உடலில் வெயில் படுதல்

No comments:

Post a Comment