வருமான வரியை சேமிக்கும் மிகச் சிறந்த முறையை அறிந்து கொள்வோம்.
1. வருமான வரியை பழைய முறை புதிய முறை என எந்த முறையில் வேண்டுமானலும் செலுத்திக்கொள்ளலாம். அது வரி செலுத்துபவரின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது.
2. தற்போது பழைய வரி முறை சிறந்ததா? புதிய வரி முறை சிறந்ததா? என பார்ப்போம்.
3. 5 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்களுக்கு பழைய முறை மற்றும் புதிய முறை இரண்டு முறையும் ஒன்று தான். இரண்டிலும் 2,50,000 - 5,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரியான ரூ.12,500 ஐ 87ஏ பிரிவின் படி தள்ளுபடி செய்து கொள்ளலாம்.
4. இனி 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிறந்தது எது என பார்ப்போம்.
5. எந்த ஒரு வருமான கழிவுகளையும் அதாவது தொழில் வரி, வீட்டு வாடகைப் படி, 80சி, 80டி, வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி என எதையும் கழிக்க விரும்பாத ஒருவருக்கு புதிய வருமான வரி தான் சிறந்தது.
6. தொழில் வரி, வீட்டு வாடகைப் படி, 80சி, 80டி, வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி அனைத்தையும் கழிக்க விரும்பும் ஒருவருக்கு பழைய வருமான வரி தான் சிறந்தது.
7. உதாரணம் ஒன்றை பார்ப்போம்.
10 லட்சம் வருமானம் உள்ள நபர் வரி விலக்குகளைப் பெற்று பழைய முறைப்படி வருமான வரி தாக்கல் செய்தால் வருமான வரி கீழ்க்கண்டவாறு அமையும்.
மொத்த வருமானம் ரூ. 10,00,000
வரிக் கழிவுகள் ரூ. 2,43,060
(வீட்டு வாடகைப் படி 38,400 , தொழில் வரி 2,500 , நிரந்தரக் கழிவு 50,000 , 80சி 1,50,000 , 80டி 2,160 ஆகக் கூடுதல் )
நிகர வருமானம் ரூ. 7,56,940
1 - 2,50,000 ரூ. 0
2,50,000 - 5,00,000 (5%) ரூ. 12,500
5,00,000 - 10,00,000 (20%) ரூ. 51,388
Cess @ 4% ரூ. 2,556
ஆக வருமான வரி ரூ. 66,444.
10 லட்சம் வருமானம் உள்ள நபர் வரி விலக்குகளைப் பெறாமல் புதிய முறைப்படி வருமான வரி தாக்கல் செய்தால் வருமான வரி கீழ்க்கண்டவாறு அமையும்.
மொத்த வருமானம் ரூ. 10,00,000
1 - 2,50,000 ரூ. 0
2,50,000 - 5,00,000 (5%) ரூ. 12,500
5,00,000 - 7,50,000 (10%) ரூ. 25,000
7,50,000 - 10,00,000 (15%) ரூ. 37,500
Cess @ 4% ரூ. 3,000
ஆக வருமான வரி ரூ. 78,000.
ஆக ஏற்கனவே வருமான வரி விலக்குகளைப் பெற்று வருபவர்களுக்கு பழைய முறையிலேயே வருமான வரி செலுத்துவது தான் சிறந்தது.
தற்போது கடந்த காலங்களிலிலேயே வரி விலக்குகளைப் பெறாமல் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு சிறந்தது எது என்று பார்ப்போம்.
10 லட்சம் வருமானம் உள்ள நபர் வரி விலக்குகளைப் பெறாமல் பழைய முறைப்படி வருமான வரி தாக்கல் செய்தால் வருமான வரி கீழ்க்கண்டவாறு அமையும்.
மொத்த வருமானம் ரூ. 10,00,000
1 - 2,50,000 ரூ. 0
2,50,000 - 5,00,000 (5%) ரூ. 12,500
5,00,000 - 10,00,000 (20%) ரூ. 1,00,000
Cess @ 4% ரூ. 4,500
ஆக வருமான வரி ரூ. 1,17,000
10 லட்சம் வருமானம் உள்ள நபர் வரி விலக்குகளைப் பெறாமல் புதிய முறைப்படி வருமான வரி தாக்கல் செய்தால் வருமான வரி கீழ்க்கண்டவாறு அமையும்.
மொத்த வருமானம் ரூ. 10,00,000
1 - 2,50,000 ரூ. 0
2,50,000 - 5,00,000 (5%) ரூ. 12,500
5,00,000 - 7,50,000 (10%) ரூ. 25,000
7,50,000 - 10,00,000 (15%) ரூ. 37,500
Cess @ 4% ரூ. 3,000
ஆக வருமான வரி ரூ. 78,000.
ஆக ஏற்கனவே வருமான வரி விலக்குகளைப் பெறாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு புதிய முறையில் வருமான வரி செலுத்துவது தான் சிறந்தது.
இப்போழுது சொல்லுங்கள். நீங்கள் தற்பொழுது எப்படி வரி செலுத்தப் போகிறீர்கள் என்று...!
No comments:
Post a Comment