ஆன்லைனில் முதல்வரின் நிவாரண நிதி எவ்வாறு வழங்குவது என பார்ப்போம்.
1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm
2. பெயர், முகவரி, பின்கோடு, மாநிலம், மொபைல் எண், இமெயில் முகவரி, பான் எண், செலுத்தும் தொகை ஆகியவற்றை உள்ளிட்டு வெரிபிகேசன் கேப்சாவை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்தவும்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் விவரங்களை சரிபார்த்து மேக் எ பேமென்ட் பட்டனை அழுத்தவும். தவறு எனில் எடிட் பட்டனை அழுத்தி திருத்தம் செய்து மேக் எ பேமென்ட் பட்டனை அழுத்தவும்.
4. தற்போது தோன்றும் பக்கத்தில் சப்மிட் பட்டனை அழுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேன்க்கிங் ஏதேனும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து பணத்தை செலுத்துங்கள்.
5. உங்களுக்கான ரசீது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
6. அந்த ரசீதைக் கொண்டு 80டி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்.
No comments:
Post a Comment