Inaiya Sevaigal: உங்களின் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரசீது பெறுவது எப்படி?

உங்களின் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரசீது பெறுவது எப்படி?




நீங்கள் அளித்த கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரசீதைப் பிரின்ட் எடுத்து வைக்க மறந்திருந்தால் தற்போது அந்த நிவாரண நிதிக்கு ரசீது பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

தற்போது வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும் என்பதால் இப்பதிவு இடப்படுகிறது.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://donation.cmdrf.kerala.gov.in/grievance/

2. தற்போது தோன்றும் பக்கத்தில் Select website என்ற பகுதியில் donation.cmdrf.kerala.gov.in என்று இருக்கும். அதை அப்படியே விட்டுவிடவும்.

3. Mode of Complaint என்ற பகுதியில் Email என்பதை தேர்வு செய்யுங்கள்.

4. Channel of Payment என்ற பகுதியில் NEFT, UPI என நீங்கள் பணம் செலுத்திய வழியைத் தேர்வு செய்யுங்கள்.

5. Name of Agency/Bank என்ற பகுதியில் நீங்கள் பணம் செலுத்திய வங்கி அல்லது முகமையைத் தேர்வு செய்யுங்கள்.

6. Agency/Bank Transaction ID என்ற பகுதியில் உங்களின் Transaction ID யை உள்ளிடுங்கள். (உங்களின் நெட் பேன்க்கிங் அக்கவுன்ட் ஸ்டேட்மென்டில் டிரான்ஸாக்சன் ஐடி யை அறியலாம்.)

7. Transaction date பகுதியில் Transaction date ஐ உள்ளிடவும்.

8. Reference பகுதியில் Finance Secretary என்பதை தேர்வு செய்யவும்.

9. Name, Email ID, Mobile number ஆகியவற்றை உள்ளிடவும்.

10. Details of Complaint பகுதியில் உங்களின் வெள்ள நிவாரண நிதி ரசீது கோரிக்கையை டைப் செய்யுங்கள்.

11. ஒரு மணி நேரத்துக்குள் உங்கள் இமெயில் ஐடிக்கு ரசீது வந்து விடும்.

எல்லா விபரங்களும் இருந்தால் நேரடியாக கீழ்க்காணும் பக்கத்தை க்ளிக் செய்து உள்ளிட்டு நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

http://receipts.cmdrf.kerala.gov.in/

No comments:

Post a Comment