Inaiya Sevaigal: ரேசன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரை சேர்ப்பது எப்படி?

ரேசன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரை சேர்ப்பது எப்படி?





ரேசன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.tnpds.gov.in/login.xhtml

2. தற்போது தோன்றும் பக்கத்தில் ரேசன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு பதிவு செய் பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அதை உள்ளிட்டு பதிவு செய் பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் குடும்ப உறுப்பினரை சேர்க்க என்ற பகுதியின் கீழ் புதிய குடும்ப உறுப்பினரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, ஆதார் எண், பதிவேற்றும் ஆவணத்தின் பெயர் ஆகியவற்றை உள்ளிடவும்.

5. நீங்கள் பதிவேற்றம் செய்யவுள்ள ஆவணத்தை ஸ்கேன் செய்து JPG ஃபைலாக 1  MB க்குள் சேவ் செய்து வைத்துக்கொண்டு File Chosen என்ற இடத்தில் அந்த ஃபைலை அப்லோட் செய்யுங்கள்.

6. இறுதியாக உறுப்பினரை சேர்க்க என்ற பட்டனை அழுத்துங்கள்.

7. அடுத்ததாக உறுதிப்படுத்துதல் கீழ் உள்ள தேர்வு பெட்டியில் டிக் செய்து பதிவு செய்ய என்ற பட்டனை அழுத்துங்கள்.

8. இவ்வாறாக புதிய குடும்ப உறுப்பினரை சேர்த்துக் கொள்ள முடியும். 

No comments:

Post a Comment