வரும் பொங்கலுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
வரும் 9 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://www.tnstc.in/TNSTCOnline/
2. தற்போது தோன்றும் பக்கத்தில் Create an account என்ற பட்டனை அழுத்துங்கள்.
3. தற்போது User name, Password, Secret question and answer, Full name, Date of birth, Address, city, State, Country, Pin code, Mobile number ஆகியவற்றை உள்ளிட்டு I agree பட்டனை டிக் செய்து Register பட்டனை அழுத்துங்கள்.
4. தற்போது தங்களின் User name, Password மூலம் லாக் இன் செய்யுங்கள்.
5. தற்போது தோன்றும் பக்கத்தில் புறப்படும் ஊர், சேரும் ஊர் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
6. அடுத்து தேதி, நேரம், பயணிகளின் எண்ணிக்கை, பயண வகுப்பு ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
7. தற்போது Search available services பட்டனை அழுத்துங்கள்.
8. தற்போது பேருந்துகள் பட்டியலிடப்படும் தங்களுக்கு விருப்பமான நேரம், விருப்பமான வழி உள்ள பேருந்திற்கு எதிரே உள்ள Book பட்டனை அழுத்துங்கள்.
9. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு விருப்பமான பேருந்து இருக்கையைத் தேர்ந்தெடுங்கள்.
10. அடுத்து பெயர், வயது போன்ற விவரங்களை சரிபார்த்து ID card Type ல் தேவையான ஐடி கார்டைத் தேர்ந்தெடுத்து ஐடி கார்டு எண்ணை உள்ளிட்டு மொபைல் எண்ணை உள்ளிட்டு Submit பட்டனை அழுத்துங்கள்.
11. அடுத்து தோன்றும் பக்கத்தில் உரிய தொகையை செலுத்தி டிக்கெட்டை பிரின்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment