Inaiya Sevaigal: IFHRMS ல் அரசு கருவூலத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை நீங்களே செலுத்துவது எப்படி?

IFHRMS ல் அரசு கருவூலத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை நீங்களே செலுத்துவது எப்படி?


கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தின் முதல் பகுதியில் பணம் செலுத்துபவரின் பெயர், தொலைபேசி எண், தெரு, கிராமம், மாநிலம், அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.

இரண்டாவது பகுதியை விட்டுவிடலாம். மூன்றாவது பகுதியில் எந்த பணம் பெற்று வழங்கும் அலுவலருக்காக (DDO) பணம் செலுத்த இருக்கிறீர்களோ அந்த அலுவலரின் குறியீட்டு எண், அந்த அலுவலகத்தின் பெயர், அந்த துறையின் பெயர், அந்த மாவட்டத்தின் பெயர் ஆகியவற்றை கணிணி காட்டும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுங்கள்.

நான்காவது பகுதியில் உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி பெற்று கன்டினியூ பட்டனை அழுத்துங்கள்.

ஐந்தாவது பகுதியில் வரவின வகை, துணை வகை, கணக்குத் தலைப்பு ஆகியவற்றை தேர்ந்தெடுத்தும் செலுத்த வேண்டிய தொகையை டைப் செய்தும் உள்ளிடுங்கள்.

தற்போது ஆட் ரோ எனும் சேர்க்க பட்டனை அழுத்துங்கள்.

அடுத்ததாக செலக்ட் பேன்க் ஃபார் பேமென்ட் என்பதில் ஸ்டேட் பேன்க் ஆஃப் இந்தியா என்பதை தேர்ந்தெடுங்கள்.

அடுத்ததாக செலுத்தும் முறையில் ஆன்லைன் என்பதை தேர்ந்தெடுங்கள்.

தற்போது சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது டெபிட் கார்டு அல்லது நெட் பேன்க்கிங் முறையில் பணத்தை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment