Inaiya Sevaigal: IFHRMS ல் உங்களின் Pay Slip ஐ டவுன்லோட் செய்வது எப்படி?

IFHRMS ல் உங்களின் Pay Slip ஐ டவுன்லோட் செய்வது எப்படி?

 

1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/oamlogin

2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் மொபைலுக்கு உங்களின் Employee Number என்று குறிப்பிட்டு வந்துள்ள எண் தான் உங்களின் User ID ஆகும். அந்த  எண்ணை User ID  என்ற இடத்தில் உள்ளிடுங்கள். (எ.கா. 04020532088) (உங்களின் உங்களின்  மொபைலுக்கு Emploee number குறிப்பிட்டு மெஸேஜ் எதுவும் வரவில்லை என்றால் Pay Slip டவுன்லோட் செய்ய இயலாது.)

3. உங்களின் பிறந்த தேதி தான் உங்களின் பாஸ்வேர்ட். அதை பாஸ்வேர்ட் பகுதியில் உள்ளிடுங்கள். (எ.கா. உங்களின் பிறந்த தேதி 16/05/1992 என்றால் ஸ்லாஸ் இல்லாமல் 16051992 என்று உள்ளிடவும்)

4. தற்போது தோன்றும் பக்கத்தில் மேல்பக்கத்தின் முதல் வரிசையில் Home, Login, Finance, Treasuries & Accounts, Stakeholders, User Manual, Contact Us, Photo Gallery, Press Release, Reference Documents, Reports என்ற தொகுதிகள் பட்டன் தெரியும்.

5. அதில் Reports என்ற பட்டனை அழுத்துங்கள்.

6. தற்போது தோன்றும் பக்கத்தில் Pay Slip, E SR என்ற தொகுதிகள் தோன்றும்.

7. அதில் Pay Slip என்ற பட்டனை அழுத்துங்கள்.

8.  நீங்கள் திறந்தவுடன் இயல்பாகவே Pay Slip பட்டன் தான் திறந்திருக்கும்.

9. தற்போது Select Month என்ற தேர்வு பெட்டியில் உங்களுக்கு தேவையான மாதத்தை தேர்ந்தெடுத்து Go பட்டனை அழுத்துங்கள்.

10. தற்போது உங்களின் Pay Slip தோன்றிவிடும். டவுன்லோட் பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

11. Pay slip தோன்றாமல் No Pay Slip Found என வந்தால் உங்களின் Pay slip Generate ஆகவில்லை என்று அர்த்தம்.

No comments:

Post a Comment