Inaiya Sevaigal: IFHRMS ல் Password ஐ மாற்றம் செய்வது எப்படி?

IFHRMS ல் Password ஐ மாற்றம் செய்வது எப்படி?


முதலில் இன்சியேட்டர் ஐடி யில் லாக் இன் செய்யுங்கள்.

தற்போது தோன்றும் முகப்பு பக்கத்தில் மேலே உள்ள இன்சியேட்டர் ஐடி க்கு பக்கத்தில் உள்ள டவுன் ஆரோவை க்ளிக் செய்யுங்கள்.


தற்போது தோன்றும் மெனுவில் மை அக்கவுன்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள்.

தற்போது வாட் இஸ் யுவர் ஃபர்ஸ்ட் ஃபோன் நம்பர் என ஒரு செக்யூரிட்டி வினா வும் அதற்கு கீழே அதற்குரிய பதிலும் இருக்கும். அந்த பதிலை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது தங்களுக்கு பிடித்தவாறு எண்ணை மாற்றி விடுங்கள். தற்போது அப்டேட் கொஸ்டின் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது லாக் அவுட் செய்து விடுங்கள்.

தற்போது லாக் இன் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது ஃபர்கெட் பாஸ்வேர்ட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது இன்சியேட்டர் ஐடி யை உள்ளிடுங்கள்.

தற்போது அதன் கீழே உள்ள கேப்சாவை உள்ளிடுங்கள்.

தற்போது வெரிஃபை பட்டனை அழுத்துங்கள்.

தற்போது சேன்ஞ்ச் பாஸ்வேர்ட் வித் ஓடிபி மற்றும் சேன்ஞ்ச் பாஸ்வேர்ட் வித் செக்யூரிட்டி கொஸ்டடின் என்ற இரு வாக்கியங்கள் தோன்றும்.

அதில் அப்டேட் பாஸ்வேர்ட் வித் செக்யூரிட்டி கொஸ்டின் என்பதை தேர்வு செய்யுங்கள்.

வாட் இஸ் யுவர் ஃபர்ஸ்ட் மொபைல் நம்பர் என்ற வினா இருக்கும்? அதற்கு கீழே நாம் ஏற்கனவே மை அக்கவுன்ட் ல் பார்த்த அந்த மொபைல் எண்ணை உள்ளிட்டு வெரிஃபை பட்டனை அழுத்துங்கள். தற்போது சேன்ஞ்ச் பாஸ்வேர்ட் மற்றும் கன்ஃபார்ம் பாஸ்வேர்ட் என்ற இரு பெட்டிகள் தோன்றும்.

தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பாஸ்வேர்ட் ஐ மாற்றி சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

(தாங்கள் சேன்ஞ்ச் பாஸ்வேர்ட் வித் ஓடிபி என்ற ஆப்சனை தேர்வு செய்தால் இன்சியேட்டர் ஐடி யுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டு பாஸ்வேர்ட் சேன்ஞ்ச் செய்ய வேண்டும்.)

இதே போல் வெரிஃபையர் மற்றும் அப்ரூவர் ஆகிய ஐடி களுக்கும் பாஸ்வேர்ட் சேன்ஞ்ச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment