புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இந்த முறை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும். அது ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசின் 1 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.
விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஒவ்வொரு ஆண்டும் இருமுறை உயர்த்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஜனவரி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 2-வது முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த உள்ளது. இந்த முறை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும். அது ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துக்கான தொழில் துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஜூலை 31-ம் தேதி வெளியானது. இந்த குறியீட்டின் அடிப்படையில், மத்திய அரசு அகவிலைப்படியை கணக்கிடுகிறது. தற்போதைய விலைவாசி சூழலில் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துமாறு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு 3 சதவீத அளவிலேயே உயர்த்தும் என தெரிகிறது.
No comments:
Post a Comment