பழைய பென்சனுக்கு மாறிய 5 மாநிலங்களுக்கு சட்ட சிக்கல்! தமிழகம் பழைய பென்சனுக்கு மாற சட்ட சிக்கல் இல்லை! - இதோ காரணம்?
கடந்த 01.01.2003 முதல் புதிய பென்சனை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசு. இதனையடுத்து மேற்கு வங்கம், தமிழகம் தவிர இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் புதிய பென்சனுக்கு மாறின.
புதிய பென்சனுக்கு மாறிய மத்திய அரசு ஊழியர்களையும் மற்றும் அனைத்து மாநில அரசு ஊழியர்களையும் PENSION RETIREMENT FUND AND DEVELOPMENT AGENCY எனும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு PRAN NUMBER எனும் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்பட்டு விட்டது.
புதிய பென்சனை நடைமுறைப்படுத்திய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீத தொகை நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணின் கீழ் பிடித்தம் செய்யப்பட்டு மத்திய அரசின் PENSION RETIREMENT FUND AND DEVELOPMENT AGENCY எனும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையிடம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்கத்தில் இன்று வரை பழைய ஓய்வூதியம் முறையே நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழக அரசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு 01.04.2003 முதல் புதிய பென்சனுக்கு மாறியது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு PENSION RETIREMENT FUND AND DEVELOPMENT AGENCY எனும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு PRAN NUMBER எனும் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்படவுமில்லை. தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் ஓய்வூதியத் தொகை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையிடம் வழங்கப்படவும் இல்லை. அதற்கு பதிலாக CONTRIBUTURY PENSION NUMBER எனும் எண்ணை தமிழக அரசே உருவாக்கி தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை தமிழக அரசின் AUDIT AND ACCOUNTANT GENERAL நிர்வாகத்திடம் ஒப்படைத்து DATA CENTRE நிர்வாகத்தின் மூலம் கணக்கு பராமரித்தும் வருகிறது. ஆக தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் புதிய பென்சன் தொகை தமிழக அரசிடமே உள்ளது.
நிலைமை இப்படி இருக்கும் போது பழைய பென்சனுக்கு மாறிய 5 மாநிலங்கள் மத்திய அரசிடம் 19 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திருப்பி கொடுக்கும் படி கேட்டுள்ளன.
இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ள மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்ட சட்டத்தில் ஒரு அரசு ஊழியர் சேர்ந்து விட்டால் அவருடைய பணத்தை அவர் ஓய்வு பெற்றால் அல்லது இறப்பு ஏற்பட்டால் 60 சதவீதம் பணத்தை பணிக்கொடையாகவும் 40 சதவீதம் பணத்தை ஓய்வூதியம் வழங்கவும் பயன்படுத்திக்கொள்ள முடியுமே தவிர இடையில் பணத்தை எடுக்க இயலாது என தெரிவித்துள்ளது.
இதனால் பழைய பென்சனுக்கு மாறிய 5 மாநிலங்களின் ஓய்வூதிய நிலைக்கு சட்ட சிக்கலும் நிதி சிக்கலும் உள்ளது.
ஆனால் தமிழக அரசின் பணம் தமிழக அரசிடமே உள்ளதால் பழைய பென்சனுக்கு தமிழக அரசு மாறுவதில் எந்த வித சட்ட சிக்கலோ? நிதி சிக்கலோ? இல்லை.
ஆக பழைய பென்சனுக்கு தமிழக அரசு மாறுவதற்கு பணம் தேவையில்லை மனம் தான் வேண்டும்.
ஆதாரம் விகடன்
நன்றியுடன்
கோபிநாதன், மயிலாடுதுறை.
No comments:
Post a Comment