Inaiya Sevaigal: ஜனவரி 2வது வாரத்தில் அறிவிக்கும் பொங்கல் போனஸை முன்கூட்டியே அறிவித்ததன் பின்னனி!

ஜனவரி 2வது வாரத்தில் அறிவிக்கும் பொங்கல் போனஸை முன்கூட்டியே அறிவித்ததன் பின்னனி!


வழக்கமாக ஜனவரி 2வது வாரத்தில் அறிவிக்கும் பொங்கல் போனஸை முன்கூட்டியே அறிவித்ததன் பின்னனி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 7 ஆயிராமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அதனைப் பின்பற்றி தமிழ அரசும் பொங்கல் போனஸ் 7 ஆயிராமாக வழங்க வேண்டி இருக்கும்.

இதனைச் சுட்டி காட்டி அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பொங்கல் போனஸை கேட்பதற்கு முன்னர் நாம் போனஸை வழங்கி விட்டால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்பதற்கு முன்னர் போனஸ் வழங்கப்பட்டுள்ளது என்ற நற்பெயர் பொது வெளியில் கிடைத்து விடவும், மேலும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போனஸை சரியாக வழங்கி வருகிறது போன்ற தோற்றத்தை பொது வெளியில் ஏற்படுத்தி விடவும், அவசர அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்புக்குப் பிறகு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பொங்கல் போனஸின் குறையை சுட்டிக் காட்டினால் அரசு ஊழியர்களின் வாடிக்கையான குற்றச்சாட்டு தானே என்று பொது வெளியில் பேச வைத்திடவும் அரவச அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 01.07.2022 முதல் ஆறு மாதங்களாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது 4 ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றியுடன்
சு.தமிழ்ச்செல்வி, ஜெ. லெட்சுமி நாராயணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.  

No comments:

Post a Comment