பென்சனுக்கான (இபிஎஃப்) Life Certificate ஐ வீட்டில் இருந்தபடியே (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க என்னென்னத் தேவை என்று பார்ப்போம்.
1. மந்த்ரா எம்எஃப்எஸ் 100 எனும் கை ரேகை ஸ்கேனர் கருவி. இதன் விலை ரூ.3100 க்குள் இருக்கும்.
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து கை ரேகை ஸ்கேனர் கருவியை வாங்கிக்கொள்ளுங்கள்.
2. கை ரேகை கருவியின் சாஃப்ட்வேர்
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் ஐந்து இலக்க கேப்சா இருக்கும். அதை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது கைரேகை கருவியின் சாஃப்ட்வேர் தோன்றும்.
அதில் முதலாவதாக உள்ள Windows Download MFS100 RD service என்பதின் கீழ் உள்ள Download MFS 100 RD Service என்ற சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. ஜீவன் பிரமான் சாஃப்ட்வேர்
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது இமெயில் முகவரியை உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு ஐ அக்ரி டூ டவுன்லோட் என்ற பட்டனை அழுத்துங்கள்.
தற்போது உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் முதலாவதாக உள்ள Download for Windows OS என்ற பட்டனை க்ளிக் செய்து ஜீவன் பரமான் சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
தற்போது ஜீவன் பிரமான் சாஃப்ட்வேரை ஓபன் செய்யுங்கள்.
தற்போது பென்சன்தாரரின் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் அந்த ஓடிபி யை உள்ளிட்டு வெரிஃபை பட்டனை அழுத்துங்கள்.
தற்போது பென்சன் தாரரின் பென்சன் ஆர்டர் எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்கள் திரையில் தோன்றும்.
தற்போது பென்சன் தாரரின் விரலை விரல் ரேகை ஸ்கேனர் கருவியில் வைத்து ஸ்கேன் செய்யுங்கள்.
பென்சனுக்கான லைஃப் சர்டிபிகேட் ஆட்டோமேட்டிக்காக டவுன்லோட் ஆகி வரும்.
அல்லது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்துள்ள பிரமான் ஐடி யை உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு ஜெனரேட் ஓடிபி பட்டனை அழுத்துங்கள். தற்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்துள்ள ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்தினால் பென்தாரரின் ஜீவன் பிரமான் முகப்பு பக்கம் தோன்றும். அதில் டவுன்லோட் சர்டிபிகேட் என்ற பட்டனை அழுத்தி உங்களது லைஃப் சர்டிபிகேட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment