பட்டயக் கணக்காளர் ( சிஏ, Chartered Accountant) நிதிக்கணக்கியல், முகாமைக்கணக்கியல், வரிமுறைமை, வணிக நிறுவனச் சட்டம் உட்பட பல கணக்கியல், நிதியியல் துறைகளில் உயர் பணியில் ஈடுபடும் தகைமையினை கொண்டவர்களாவார்கள்.
பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வுக்கு எப்படி தயாராகலாம் என்பதை இங்கே காண்போம்.
முழு சிஏ படிப்பு 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது
– சி.ஏ முதல்நிலை
– சி.ஏ இடைநிலை
– சி.ஏ 3 ஆண்டுகள் நேரடி பயிற்சி
– சிஏ இறுதி நிலை
சிஏ முதல்நிலை தேர்வு:
12 ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள், முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணபிக்கலாம். இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை (மே, நவம்பர்) நடக்கிறது. தேர்வுக்கு தயாராக குறைந்தது நான்கு மாதங்கள் தேவைப்படும். சுயமாகவும், பயிற்சி வகுப்புகள் மூலமாகவும் தேர்வை அணுகலாம். 2017 வரை நடத்தப்பட்டு வந்த பொது சோதனை தேர்வுக்குப் பதிலாக தற்போது இந்த முதல்நிலை பாடநெறி பின்பற்றப்பட்டு வருகிறது.
முதல்நிலையை வெற்றிகரமாக முடிக்க கீழ்காணும் நான்கு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும் வேண்டும்.
- கணக்கியல் கோட்பாடுகள் மற்றும் நடைமுறை
- வணிக சட்டம் மற்றும் ஆங்கில மேலாண்மை
- வணிக கணிதம், புள்ளிவிவரங்கள்
- வணிக பொருளாதாரம் மற்றும் வணிக அறிவு
வணிக மாணவராக இருந்தால், கணக்கியல் மற்றும் வணிகச் சட்டம் தொடர்பான பாடங்களில் கூடுதல் நன்மை உண்டு. ஆனால், 12ம் வகுப்பை நிறைவு செய்த அனைத்து மாணவர்களும் சி.ஏ படிப்புகளில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
தேர்வுக்கு தயாராகுவது எப்படி?
மாணவர்கள் தங்களது படிப்புக்கான கால அட்டவணையை தயார் செய்து கொண்டு படிக்கவேண்டும். “ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஆறு மணிநேரம் அவகாசம் கொடுத்தால், அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடரியைக் கூர்மைப்படுத்துவேன்” என்பது ஆபிரகாம் லிங்கனின் வரியாகும். சரியான திட்டமிடல் இல்லாமல், எந்த இலக்கையும் அடைய முடியாது. கால அட்டவணையை உன்னிப்பாக பின்பற்றுதல் முக்கியமாகும்.
நீங்கள் வலுவாக இருக்கும் பாடங்களுக்கு குறைந்த நேரமும், பலவீனமாக கருதும் பாடங்களுக்கு அதிக நேரமும் ஒதுக்க வேண்டும். உதாரணமாக அறிவியல் பிரிவு மாணவராக இருந்தால், கணக்கியல் மற்றும் வணிகச் சட்டம் தொடர்பான பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சில பயற்சி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களிடம் சில ஆலோசனைகளை கேட்டுப் பெறுவது சிறந்ததாகும். வினா வங்கி புத்தகத்தில் உள்ள கேள்விகளை மட்டும் தயார் செய்யாமல், பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்துவது எளிதாக அமையும். தேர்வின் பொது எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலை பாடப்புத்தகம் வழங்கும்.
தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், பொதுவான புரிதலை அதிகரிப்பதற்கும் தேர்வுக்கு முன்னதாக மாக் டெஸ்ட் தேர்வுக்கு உட்படுத்துவது நல்லது.
சிஏ படிப்பை விளக்கும் எளிய வரைபடம்
https://resource.cdn.icai.org/19323ca_atcourse260510.pdf
சிஏ படிப்பை பற்றிய முழு விளக்கக் கையேடு
No comments:
Post a Comment