1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
2. தற்போது தோன்றும் பக்கத்தில் PAN எண், பிறந்த தேதி, பெயர், (First Name , Last Name) (பெயர் பான் எண்ணில் படி உள்ளிடவும் அல்லது இ ஃபைலிங் இணையதளமான https://portal.incometaxindiaefiling.gov.in/e-Filing/UserLogin/LoginHome.html?lang=eng இந்த இணையதளத்தில் லாக் இன் செய்து உங்களது பெயர் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே இங்கேயும் உள்ளிட வேண்டும்) வெரிபிகேஷன் கோடு ஆகியவற்றை உள்ளிட்டு Proceed பட்டனை அழுத்துங்கள்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் 4 வகையான Option கள் காண்பிக்கப்படும். அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பான் எண்ணில் உள்ள பெயரும் ஆதாரில் உள்ள பெயரும் ஒன்றாக இருந்தால் ஆப்சன் 4 ஐ தேர்ந்தெடுப்பது சிறந்தது.
5. இல்லையென்றால் அனைவரும் ஆப்சன் 1 தேர்ந்தெடுப்பது நல்லது.
6. ஆப்சன் 1 ல் கீழ்க்கண்டவற்றை உள்ளிடவும்.
7. Tan of the Deductor என்பதில் உங்களது ஊதியம் வழங்கும் அலுவலரின் டேன் எண்ணை உள்ளிடவும், Type of Deduction என்பதில் TDS Salary என்பதை தேர்ந்தெடுக்கவும். Assessment year உங்களுக்குத் தேவையான அஸ்ஸெஸ்மென்ட் ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும். Month என்பதில் பிப்ரவரியைத் தேர்ந்தெடுக்கவும். Year என்பதில் உங்களுக்குத் தேவையான ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும். TDS Amount என்ற இடத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த ஆண்டில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி தொகையை உள்ளிடவும். அதாவது பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி தொகையை உள்ளிடவும். நீங்கள் குறிப்பிட்ட ஆண்டில் பிப்ரவரி மாதம் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி தொகை ரூ. 5484 எனில் 5484.00 என உள்ளிடவும்.
8. தற்போது Next பட்டனை அழுத்துங்கள்.
9. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது முகவரி, மொபைல் எண், இமெயில் முகவரி, பின்கோடு எண் ஆகியவற்றை உள்ளிட்டு Next பட்டனை அழுத்துங்கள்.
10. தற்போது உங்கள் இமெயில் முகவரிக்கு ஆக்டிவேசன் லின்க் மற்றும் ஆக்டிவேசன் கோடு 1 ம் , உங்கள் மொபைல் எண்ணுக்கு ஆக்டிவேசன் கோடு 2 ம் அனுப்பி வைக்கப்படும். தற்போது உங்கள் இமெயிலில் உள்ள அந்த லின்க் ஐ க்ளிக் செய்து மெயிலில் உள்ள ஆக்டிவேசன் கோடு 1 மற்றும் மொபைலில் ஆக்டிவேசன் கோடு 2 ஆகியவற்றை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
11. தற்போது உங்களுக்குத் தேவையான பாஸ்வேர்டை டைப் செய்து உருவாக்குங்கள்.
12. தற்போது கீழ்க்கண்ட பக்கத்தை க்ளிக் செய்து லாக் இன் செய்யுங்கள். யூசர் ஐடி உங்களது பான் எண். பாஸ்வேர்ட் நீங்கள் கொடுத்த பாஸ்வேர்ட். கேப்சாவை அதில் உள்ளவாறு உள்ளிடுங்கள்.
13. தற்போது தோன்றோம் பக்கத்தில் I Agree என்ற பட்டனை டிக் செய்து Proceed பட்டனை அழுத்துங்கள்.
14. தற்போது உள்ள பக்கத்தில் View / Verify Tax Credit என்ற பட்டனை அழுத்துங்கள்.
15. தற்போது தோன்றும் பக்கத்தில் Tan Number, Financial Year ஆகியவற்றை உள்ளிடுங்கள். Provisional Certificate Type ல் 16 என தேர்ந்தெடுத்து View பட்டனை அழுத்துங்கள்.
16. Ctrl + P பட்டனை அழுத்தி பிரின்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.
16.
No comments:
Post a Comment