Inaiya Sevaigal: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

http://tngasa.in/pages/forms/application_preview.php


2. தற்போது தோன்றும் பக்கத்தில் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு ஜெனரேட் ஓடிபி பட்டனை அழுத்துங்கள். தங்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

http://tngasa.in/pages/forms/student_signup.php


4. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஐ கொடுத்து சைன் இன் பட்டனை அழுத்தவும்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் ரெஜிஸ்ட்ரேசன், அப்ளிகேசன், காலேஜ் அன்ட் கோர்ஸ் செலக்சன், பேமென்ட், டவுன்லோட் அன்ட் பிரின்ட் அப்ளிகேசன், செர்டிபிகேட் அப்லோடிங் ஆகிய பகுதிகள் தோன்றும்.

6. முதலில் அப்ளிகேசன் என்னும் பகுதியை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். அதில் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், மதம், சாதி, முகவரி, ப்ளஸ் டூ, ப்ளஸ் ஒன் கல்வி விபரங்கள் ஆகிய விபரங்களை உள்ளிட்டு ப்ரிவியூ அன்ட் சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

7. அதன் பின் சரிபார்த்து ஃபைனல் சப்மிசன் பட்டனை அழுத்துங்கள்.

8. அடுத்ததாக காலேஜ் அன்ட் கோர்ஸ் செலக்சன் பட்டனை அழுத்தவும்.

9. தற்போது தோன்றும் பக்கத்தில் படிக்க விரும்பும் மாவட்டத்தின் பெயர், கல்லூரி பெயர், படிப்பின் பெயர் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

10. தற்போது பேமென்ட் பட்டனை அழுத்தி தங்களுக்கான கட்டணத்தை நெட்பேன்க்கிங் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலுத்துங்கள்.

11. தற்போது டவுன்லோட் பிரின்ட் அப்ளிகேசன் பட்டனை அழுத்தி தங்களின் அப்ளிகேசனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

12. சர்டிபிகேட் அப்லோட் பட்டனை அழுத்தி தேவையான சர்பிகேட்களை அப்லோட் செய்யுங்கள்.

No comments:

Post a Comment