ஆன்லைனில் அவசர வாகன அனுமதி பெறுவது எப்படி என்று பார்ப்போம். (திருத்தப்பட்டது)
1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
Click here to Vehicle Permission
2. தற்போது தோன்றும் பக்கத்தில் New Launched Services View All என்ற பட்டனை அழுத்துங்கள். தற்போது தோன்றும் சிறிய பக்கத்தில் Tamilnadu என்ற எழுத்தை அழுத்துங்கள். தற்போது தோன்றும் சிறிய பக்கத்தில் ePass_TN என்ற எழுத்தை அழுத்துங்கள். தற்போது தோன்றும் பக்கத்தில் Apply for Service என்ற எழுத்தை அழுத்துங்கள்.
3. தற்போது தோன்றும் பக்கத்தில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், இமெயில் முகவரி, பயணதாரரின் வகை (அரசு ஊழியர், தனியார்), வீட்டு எண், முகவரி, காவல் நிலையம், மாவட்டம், வட்டம், பின்கோடு, அஞ்சலகம், வாகன பதிவு எண், வாகன வகை (டூ வீலர், ஃபோர் வீலர்), பயண வகை (ஒரு வழி, இரு வழி), பயண தேவை (மருத்துவம், திருமணம், அரசு சேவை, அத்தியாவசிய பொருள் விநியோகம், இதர பயணம்), தேவைப்படும் பயண தேதிகள், பயண இடங்கள், பயணக் குறிப்பு, பயணம் செய்யும் நபர்களின் பெயர், வயது, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
3. மேற்கண்டவற்றை உள்ளிட்ட பிறகு ஐ அக்ரி என்ற தேர்வு பெட்டியை டிக் செய்யுங்கள்.
4. அடுத்ததாக கேப்சாவை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
5. வாகன அனுமதியைப் பிரின்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment