Inaiya Sevaigal: பட்டா, சிட்டா, புல வரைபடம், நகர நில அளவையைப் பார்வையிடுவது எப்படி?

பட்டா, சிட்டா, புல வரைபடம், நகர நில அளவையைப் பார்வையிடுவது எப்படி?





பட்டா, சிட்டா, நிலத்தின் உரிமையாளர் பெயர் ஆகியவற்றைப் பார்வையிடுவது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


2. தற்போது தோன்றும் பக்கத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்யுங்கள். அடுத்ததாக பட்டா எண் மூலமாக பார்க்க விரும்புகிறீர்களா? அல்லது புல எண் மூலமாக பார்க்க விரும்புகிறீர்களா? அல்லது பெயர் மூலமாக பார்க்க விரும்புகிறீர்களா? என முடிவு செய்து  மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

3. பெயர் மூலமாகத் தேடினால் ஒரே பெயரில் பலர் இருப்பர். கால விரயம் ஏற்படும். ஆகவே, பட்டா எண் அல்லது புல எண் மூலமாகத் தேடுவதே சிறந்தது.

4. தற்போது பட்டா எண் அல்லது புல எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு கீழே உள்ள அங்கீகார மதிப்பை உள்ளிடவும்.

5. தற்போது சமர்ப்பி பட்டனை அழுத்தவும்.

6. தங்களுக்கு தேவையான விபரம் திரையில் தோன்றும். பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.




நிலத்தின் வரைபடம், அளவு ஆகியவற்றை பார்வையிடுவது எப்படி? என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


2. தற்போது தோன்றும் பக்கத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்யுங்கள். 

3. தற்போது புல எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு கீழே உள்ள அங்கீகார மதிப்பை உள்ளிடவும்.

4. தற்போது சம்ர்ப்பி பட்டனை அழுத்தவும்.

5. தற்போது புலப்படம் பார்வையிட என்ற வார்த்தை திரையில் தோன்றும். புலப்படம் பார்வையிட என்ற அந்த வார்த்தையை க்ளிக் செய்யுங்கள்.

6. தங்களுக்கு தேவையான விபரம் திரையில் தோன்றும். பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment