Inaiya Sevaigal: சென்னை மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி?

சென்னை மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி?





சென்னை மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm

2. உள்ளே சென்றதும் BIRTH CERTIFICATE என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. உடன் தோன்றும் பக்கத்தில் குழந்தையின் பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டை மட்டும் உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் நீங்கள் பிறந்த தேதியில் பிறந்த குழந்தைகளின் பெயர்கள் பட்டியலிடப்படும். அதில் உங்கள் குழந்தையை கண்டறிந்து எதிரில் உள்ள பிரின்ட் பட்டனை அழுத்தி பிறந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

5. மற்றொரு முறையிலும் குழந்தையை தேடலாம்.

6. கீழே உள்ள Advanced Search என்ற பட்டனை அழுத்துங்கள்.

7. தற்போது தோன்றும் பக்கத்தில் பதிவு எண், குழந்தையின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தந்தையின் பெயர், தாயின் பெயர் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டை மட்டும் உள்ளிட்டு கேப்சாவை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

8. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களின் குழந்தையைக் கண்டறிந்து எதிரில் பிரின்ட் பட்டனை அழுத்தி பிறந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment