Inaiya Sevaigal: தமிழக சுற்றுலாத்துறையில் சுற்றுலா புக்கிங் செய்வது எப்படி?

தமிழக சுற்றுலாத்துறையில் சுற்றுலா புக்கிங் செய்வது எப்படி?





தமிழக சுற்றுலாத்துறையில் சுற்றுலா புக்கிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://www.ttdconline.com/login.jsp

2. தற்போது தோன்றும் பக்கத்தில் Sign Up என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் பெயர், பாலினம், தேசியம், இமெயில் முகவரி, நாடு, மாநிலம், மாவட்டம், நகரம், முகவரி, பின்கோடு, மொபைல் எண், யூசர் ஐடி, பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை உள்ளிட்டு Save பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது Log in செய்து உள்ளே செல்லுங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் Tour Booking என்ற தொகுதியைத் தேர்ந்தெடுங்கள்.

6. தற்போது தமிழக சுற்றுலாத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலாக்களும் பட்டியலிடப்படும்.

7. தங்களுக்குத் தேவையான சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்கவும்.

8. தற்போது தோன்றும் பக்கத்தில் வாகனத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

9. தற்போது விலைப்பட்டியல் காண்பிக்கப்படும்.

10. விலைப்பட்டியலை அறிந்த பின் Book Now பட்டனை அழுத்துங்கள்.

11. தற்போது தோன்றும் பக்கத்தில் வாகனத்தில் இருக்கைகளின் காலியிடங்கள் காண்பிக்கப்படும்.

12. தங்களுக்கு தேவையான இருக்கையைத் தேர்ந்தெடுத்து தங்களின் பெயர், வயது, பாலினம், பெரியவரா? குழந்தையா? அறையின் வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து Proceed பட்டனை அழுத்தி உரிய தொகையை செலுத்தி ரசீதைப் பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment